அப்படியா! | நாக்கு பற்றி அறியாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
முழுவதுமாக தசையால் ஆன உறுப்பு நாக்கு மட்டுமே.
நாக்கில் உள்ள அரும்புகளே சுவையை உணர காரணமாக இருக்கின்றன. அந்த சுவை அரும்புகள் ’பாப்பிலோயி’ என்கிற சுவை அறியும் குழாய்களின் மீது அமைந்துள்ளன.
சுவை அரும்புகள் நாக்கிறகு மட்டுமல்ல, கன்னத்தில் உள்புற பகுதியிலும், வாயின் உட்புறபகுதியிலும் , நாக்கின் அடிப்பகுதியிலும் அமைந்துள்ளன.
சுவை அரும்புகள் பல இடங்களில் இருந்தாலும், நாக்கு மட்டுமே சுவையை உணர்ந்து அது பற்றிய தகவல்களை மூளைக்கு கடத்துகின்றன.
நமது பார்வைக்கு தென்படும் நாக்கு மூன்றில் 2 பங்கு மட்டுமே ஒரு பங்கு அளவு நமது பார்வைக்கு தெரியாமல் தொண்டைக்குள் அமைந்திருக்கும்.
மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் "சூப்பர்டேஸ்ட்டர்ஸ்" களாக இருக்கிறார்கள் அதாவது இவர்கள் நாக்கில் கிட்டத்தட்ட 10000 சுவைமொட்டுகள் இருக்கும். சிலர் "நான்டேஸ்ட்டர்ஸ்" என்று அளிக்கப்படுகிறார்கள். காரணம் அவர்கள் நாக்கில் சராசரியை விட குறைவான சுவை மொட்டுகளே இருக்கும். பெரும்பாலும் இவர்களால் கசப்பு சுவையை உணர முடியாது.
நாக்குதான் உடலின் மிக வலிமையான தசை என்ற பொய்யான கருத்து நிலவி வருகிறது. ஆனால், நாக்கு என்பது ஒரு தசை மட்டுமல்ல, அது எட்டு தசைகள் இணைந்த தொகுப்பாகும். இந்த தசைகளுக்கு இடையே உள்ள பிணைப்புதான் நாக்கை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருக்கிறது.
நம்முடைய கைரேகை போல ஒவ்வொருவரின் நாக்கும் தனித்தன்மை வாய்ந்தது. அதாவது, நம்மை போல வேறு யாருக்கும் இருக்காது. இப்போது கைரேகையை பாதுகாப்பிற்கு உபயோகப்படுத்துவது போல விரைவில் நாக்கையும் பாதுகாப்பிற்காக பயன்படுத்த தொடங்கலாம். ஆராய்ச்சியாளர்கள் அந்த முயற்சியில் ஏற்கனவே இறங்கிவிட்டனர் என்றுதான் சொல்லப்படுகிறது.
நாக்கின் எடை மனிதர்களை போலவே நாக்கின் எடையும் அதிகரிக்க கூடும்.
நாக்கின் கொழுப்பு அளவு அதிகரிப்பது தூக்கத்தில் ஏற்படக்கூடிய கடுமையான நோயின் அறிகுறியாகும். இது தூங்கும்போது மூச்சு திணறலை ஏற்படுத்தி உயிரையே பறிக்கக்கூடும்.
நாக்கை வைத்து நமது உடல்நலத்தை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம். ஆரோக்கியமான நாக்கு என்பது பிங்க் நிறத்தில் இருக்கும். அடர் சிவப்பு நிற நாக்கு போலிக் அமிலம் அல்லது பி12 குறைபாடு, ஸ்கார்லெட் காய்ச்சல் போன்றவற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். நாக்கின் மேற்புறத்தில் வெள்ளையாய் இருப்பது லுகோபிலக்கியாவின் அறிகுறியாக இருக்கலாம். கருப்பு நிறம் பாக்டீரிய தொற்றை குறிக்கும். வலிமிகுந்த கொப்புளங்கள் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.