ஆப்கனிலிருந்து வந்த புற்றுநோய் பாதித்த கர்ப்பிணிக்கு இந்தியாவில் அறுவை சிகிச்சை

ஆப்கனிலிருந்து வந்த புற்றுநோய் பாதித்த கர்ப்பிணிக்கு இந்தியாவில் அறுவை சிகிச்சை
ஆப்கனிலிருந்து வந்த புற்றுநோய் பாதித்த கர்ப்பிணிக்கு இந்தியாவில் அறுவை சிகிச்சை

ஆப்கானிஸ்தானிலிருந்து கணைய புற்றுநோய் சிகிச்சைக்காக வந்திருந்த ஆறு மாத கர்ப்பிணிக்கு, டெல்லி மருத்துவமனையொன்றில் பாதுகாப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த சிசு, எவ்வித அசைவுக்கும் உள்ளாகாதவாறு, கணையப் பகுதியிலிருந்து புற்றுநோய்க் கட்டியை மட்டும், மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கணைய புற்றுநோய்க்கு சிகிச்சை கிடைக்கவில்லை என்ற காரணத்தினால், அப்பெண் இந்தியாவுக்கு கடந்த வாரம் வந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு கணைய புற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட போது, ஐந்தரை மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். குழந்தை பிறந்தபிறகு அறுவை சிகிச்சை செய்யலாம் என யோசித்தபோது, அதற்குள் புற்றுநோய் உடல் முழுக்க பரவிவிடக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் தாய் சேய் நலன் கருதி உடனடியாக இந்தியா வந்து சிகிச்சை பெற்றிருந்திருக்கிறார். அதேபோல, கர்ப்பிணியாக இருந்த காரணத்தினால் அவருக்கு கீமோதெரபி சிகிச்சையும் அளிக்கமுடியாமல் இருந்துள்ளது.

இந்த அறுவை சிகிச்சை குறித்து, அதை மேற்கொண்ட மருத்துவர் அமித் ஜாவத் கூறுகையில், “இந்த சிகிச்சை 4 மணி நேரத்துக்கு தொடர்ந்து நடைபெற்றது. வயிற்றிலுள்ள சிசு, கொஞ்சம்கூட அசைவை பெறாத வகையில் இதை செய்திருக்கிறோம். சிகிச்சைக்குப் பிறகான பரிசோதனைகளில், தாயும் சேயும் நலமென்றே தெரியவந்துள்ளது. ஆகவே பிறக்கும் குழந்தை, ஆரோக்கியமாக பிறக்கும்” எனக்கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com