தமிழ்நாட்டில் 121 டயாலிசிஸ் மையங்கள்: மத்திய அரசு தகவல்

தமிழ்நாட்டில் 121 டயாலிசிஸ் மையங்கள்: மத்திய அரசு தகவல்
தமிழ்நாட்டில் 121 டயாலிசிஸ் மையங்கள்: மத்திய அரசு தகவல்

டிசம்பர் 2021 வரையிலான தரவுகளின் படி தமிழ்நாட்டில் 121 டயாலிசிஸ் மையங்களும், புதுச்சேரியில் 2 டயாலிசிஸ் மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

" நாட்டிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக டயாலிசிஸ் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் 2016-ல் பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் படி, தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சேவைகளை இலவசமாக வழங்க மாநில அரசுகளுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளை அடிப்படையில் நிதி உதவி வழங்கப்படுகிறது.

35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 569 மாவட்டங்களில் 1045 மையங்களில் 7129 ஹீமோடயாலிசிஸ் இயந்திரங்களின் மூலம் பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 2021 வரையிலான தரவுகளின்படி தமிழ்நாட்டில் 121 டயாலிசிஸ் மையங்களும், புதுச்சேரியில் 2 டயாலிசிஸ் மையங்களும் செயல்பட்டு வருகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: PIB

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com