பல் வலி
பல் வலிpt

பல் வலியை சாதாரணமாக எடுக்க வேண்டாம்... இதய நோய் பிரச்சினை உள்ளவர்கள் கவனத்திற்கு!

இதை கவனிக்க தவறினால் பெரிய ஆபத்தில் கொண்டு சேர்க்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
Published on

இதய நோய் பிரச்சினை உள்ளவர்கள் பல் வலியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் மாரடைப்புக்கான அறிகுறியாக அது இருக்கக் கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மாரடைப்பு உட்பட இதய பாதிப்புகள், மார்பகம், தோள்பட்டை, கழுத்து, முகம், தாடை மற்றும் பல் வலி மூலமாக வெளிப்படுவதுண்டு. இந்த அறிகுறிகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இதய பிரச்சினை உள்ளவர்கள் பல் வலியை அறிகுறியாக கவனிக்கத் தவறுகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பல் வலி
கைதிகளுக்கு அறுவை சிகிச்சை.. இனி வாட்ஸ்அப் மூலம் ஒப்புதல்!

அதேசமயம், பல் வலி வந்தாலே அது இதய பாதிப்பு தொடர்பானது என கருதத் தேவையில்லை. இதய பிரச்சினை இருப்பவர்கள் பல் வலி குறித்து கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com