சென்னையில் கொரோனாவால் 25 வயது இளைஞர் உயிரிழப்பு!
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடரும் நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 25 வயதான இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைமலை நகரை சேர்ந்த 60 வயதான முதியவர் தீவிர நுரையீரல் தொற்றால் உயிரிழந்ததாகவும், அவரது மரணம் பின்னர் கொரோனாவால் ஏற்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ தகவலில் கூறப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 1 ஆம் தேதி) சென்னையில் 25 வயதான இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு மூச்சுக்குழாயில் ஏற்பட்ட ஆஸ்துமா பாதிப்பு காரணமாக இறுதியில் உயிரிழந்துள்ளார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில், இது இரண்டாவது கொரோனா மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 3961 தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.