துளசியில் மார்பக புற்றுநோய்க்கான மருந்து... ஜெர்மனி காப்புரிமை பெற்ற திருச்சி ஆய்வுக்குழு

துளசியில் மார்பக புற்றுநோய்க்கான மருந்து... ஜெர்மனி காப்புரிமை பெற்ற திருச்சி ஆய்வுக்குழு
துளசியில் மார்பக புற்றுநோய்க்கான மருந்து... ஜெர்மனி காப்புரிமை பெற்ற திருச்சி ஆய்வுக்குழு

துளசியில் இருந்து மார்பகப் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்த திருச்சி மாநகர தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள் ஜெர்மனி நாட்டின் காப்புரிமையைப் பெற்றுள்ளனர்.

திருச்சியை சேர்ந்த தூய வளனார் (தனியார்) கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியர் செந்தில்குமார் மற்றும் அவரது குழுவினர், துளசிச் செடியில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட மூலக்கூறுகளால் மார்பக புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியும் என கண்டறிந்து அதை நிரூபித்துள்ளனர். இதற்கு ஜெர்மனி நாட்டின் காப்புரிமை நிறுவனம் காப்புரிமை அளித்துள்ளது.

மருத்துவ குணம் வாய்ந்த துளசியில் உள்ள மூலக்கூறுகளை பிரித்தெடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து மூலம் மார்பக புற்றுநோய் வளர்ச்சியை தடுக்க முடியும் என ஆய்வு செய்ததில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு துளசிச் செடிகளின் ரகங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டதாகவும் தெரிவித்த பேராசிரியர் செந்தில் குமார், ஆய்வுக்கு காப்புரிமை பெற்றுள்ளது மூலம் விவசாயிகளை அதிக அளவில் துளசி செடிகளை சாகுபடி செய்ய வைத்து அதன் மூலம் மருந்து தயாரிப்பில் ஈடுபட முடியும் என்று தெரிவித்தார்.

இதன் மூலம் மார்பகப் புற்றுநோய்க்கான மருந்து மலிவான விலையில் கிடைக்கும் என்றும், இந்த ஆராய்ச்சிக்கு காப்புரிமை கோரி ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த காப்புரிமை நிறுவனத்திடம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்த நிலையில் தற்போது காப்புரிமை கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com