உங்க மாமனாருடனான உறவை பலபடுத்த எண்ணுகிறீர்களா?.. இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

உங்க மாமனாருடனான உறவை பலபடுத்த எண்ணுகிறீர்களா?.. இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!
உங்க மாமனாருடனான உறவை பலபடுத்த எண்ணுகிறீர்களா?.. இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

மாமியார் மருமகள் இடையேயான உறவுகள், அவர்களிடையேயான சண்டை சச்சரவுகள் பற்றிய படங்கள், காட்சிகள் பலவும் தொன்றுத்தொட்டு காணக்கிடக்கின்றன. ஆனால் மாமனார் மருமகன் இடையேயான உறவு குறித்த படங்களோ காட்சிகளோ பெரிதளவில் காட்டப்பட்டிருக்காது.

நக்கல் நையாண்டிக்காக சில காட்சிகள் இருந்தாலும் மாமனார் மருமகன் உறவை பறைசாற்றும் விதமான புரிதல் கொண்ட நிகழ்வுகள் எதுவும் பொதுவெளியில் வெளிப்படாமலேயே இருக்கும். வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தாலும் கூட மாமனார் - மருமகன் உறவில் தன்னிச்சையாகவே இடைவெளி இருந்துவிடுவதையே அறிந்திருப்போம். ஏனெனில் மரியாதை கலந்த தயக்கம் இருப்பதால் அந்த உறவில் ஒரு பிணைப்பே இல்லாதது போன்றே இருக்கும்.

அப்படிப்பட்ட மாமனார்-மருமகன் உறவை பலப்படுத்த, பராமரிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றி தற்போது காணலாம்:

பொதுவான பழக்கங்களை மேம்படுத்தலாம்:

மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையேயான பந்தத்தை உறுதிப்படுத்த இருவருக்கும் இடையே உள்ள பொதுவான பழக்க வழக்கங்களோடு உறவாட தொடங்கினாலே போதும். அந்த உறவு மேம்பட்டுவிடும். அதாவது நியூஸ் பேப்பர் படிப்பது, வாக்கிங் செல்வது, டிவி பார்ப்பது போன்ற ஆக்ட்டிவிட்டிகளில் ஈடுபடலாம்.

மரியாதை மூலம் உறவை பலபடுத்துதல்:

ஒரு உறவை நீடித்து நிலைக்கச் செய்ய முக்கிய காரணியாக இருப்பது மரியாதைதான். பாரபட்சம் பாராது ஒருவரது நம்பிக்கைகளுக்கும், உணர்வுகளுக்கும் மியூச்சுவலாக மதிப்பளிக்கும் போது அந்த உறவு பலப்படாமல் போகாது. அந்த வகையில் ஒரு மருமகனாக இருக்கக் கூடியவர் எப்போதும் தன் மாமனார் மீது மரியாதை உள்ளவராக இருத்தல் அவசியமாக பார்க்கப்படுகிறது. இது மாமனாருக்கும் பொருந்தும். பரஸ்பரமான மரியாதை ஆரோக்கியமான உறவைப் பேணுவதற்கு கருவியாக அமையும். எல்லாவற்றையும் விட மனைவியிடம் அவரது அப்பாவை பற்றி தவறாக பேசுவதை கணவன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதிக குறுக்கீடு இருத்தல் கூடாது:

பிரச்னையோ அல்லது எந்த தருணமாக இருந்தாலோ மகள் மற்றும் மருமகன் இடையே தந்தையான மாமனார் அதிகளவில் தலையிடாமல் இருத்தல் வேண்டும். இது மகளின் வாழ்க்கையை கெடுப்பதற்காக இல்லாமல் அவர்களாகவே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே குறிக்கிறது.

உங்கள் மாமனாருக்கு உதவலாம்:

தனது வாழ்வில் மாமனார் ஏதேனும் பிரச்னையில் சிக்கியிருந்தால் அவருக்கு ஒரு மகனை போன்று பக்கபலமாக இருந்து உதவலாம். அது அலுவலக ரீதியான பிரச்னையாக இருந்தாலும் சரி தாமாக முன்வந்து அவருக்கு உதவலாம் அல்லது நேரடியாக உதவாவிட்டாலும் வெளியே அழைத்துச் சென்று சற்று ஆசுவாசப்படுத்தலாம். உடல் ரீதியான பிரச்னைகளாக இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல், பரிசோதனையின் போது உறுதுணையாக இருத்தல் போன்ற நடவடிக்கைகளால் மாமனார் - மருமகன் மீதான உறவு மேம்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com