மாதவிடாய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் பற்றிய புரிதலும் அதுபற்றிய விழிப்புணர்வு என்பதும் கிடைப்பதில்லை. மாதவிடாய் சார்ந்த ஒரு சில கேள்விகளை குழந்தைகள் நல மருத்துவர் மனுலக்‌ஷ்மி அவர்களிடம் முன்வைத்திருந்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் இங்கே...
Periods
Periods Twitter

மாதவிடாய் உதிரம் எத்தனை நாட்கள் இருக்கலாம்?

ஒவ்வொரு மாதமும் கர்ப்பப்பையில் குழந்தை உருவாவதற்காக எண்டோமெட்டிரியம் அடுக்கு என்பது உருவாகும். இந்த "எண்டோமெட்டிரியம் லைனிங்" என்பது கழன்று வெளியே வரும்போதுதான் மாதவிடாய் என்பது உருவாகின்றது. இது ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ஒரு நிகழ்வு. மாதவிடாய் உதிரத்தின் நிறம், அளவு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும்.

Blood
BloodTwitter

இந்த நிறம் சில சமயங்களில் ஆரம்பத்தில் கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். அதுவே இறுதில் சிவப்பு நிறமாக மாறும். இது எந்த விதத்திலும் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது அல்ல. எடுத்துக்காட்டாக அடர் சிவப்பு நிறம் , சிவப்பு நிறம், கருஞ்சிவப்பு நிறம் என்று பல நிறங்களில் மாதவிடாய் இருக்கும். ஆனால் மாதம் 3 அல்லது 5 நாட்கள் மாதவிடாய் சரியாக நடந்தால் போதுமானது. 7 அல்லது 8 நாட்களை தாண்டி சென்றால் கட்டாயம் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும் .

மனஅழுத்தம் , கோபம் வருவதற்கு காரணம் என்ன?

மன மற்றும் உடல் சர்ந்த பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் PMS. PMS என்பது Premenstrual Syndrome. மாதவிடாயிக்கு முன் ஏற்படும் அறிகுறி என்று கூறலாம். PMS என்பது மாதவிடாய் காலங்களில் ஈஸ்ட்ரோஜன் , புரோஜெஸ்ட்ரோன் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியின் ஏற்ற இறக்கத்தினை குறிக்கிறது .

Estrogen  and Progesterone
Estrogen and ProgesteroneTwitter

உதாரணமாக , Mood Swing ,சோர்வு, மனஅழுத்தம், கவலை, கோபம், மார்பகங்களில் ஏற்படும் மாற்றம் போன்றவை அடங்கும். மாதவிடாய் முடிந்த பிறகு இது நின்றுவிடும். ஒவ்வொருக்கும் ஏற்றார்போல இது மாறுபடும். வாழ்கை காலகட்டங்களுக்கு ஏற்றார்போலவும் மாறும். இது அதிகமாக மாறும்போது அதை கட்டுப்படுத்துவதற்கு சிகிச்சை முறைகளும் இருக்கின்றது.

மாதம் 2 முறை மாதவிடாய் நடைபெற்றால் என்ன செய்வது?

மாதவிடாய் சுழற்சி என்பது 25 முதல் 28 நாட்களுக்குள் நடக்கவேண்டிய நிகழ்வு.

Day calculation
Day calculationTwitter

இந்த கால இடைவெளியில் தொடர்ச்சியாக மாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை சென்று பார்க்கவேண்டியது அவசியம்.

குறிப்பு: மாதவிடாய் சார்ந்த சந்தேகங்களை சரியான குழந்தை நல மருத்துவரிடம் சென்று கேட்டுதெரிந்து கொண்டு அதற்கேற்ப தீர்வுகளை எடுப்பது என்பது என்றுமே சரியான செயல். தேவையில்லாத கட்டுக்கதைகளை நம்பி ஆரோக்கியத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடவேண்டாம்.

- Jenetta Roseline S

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com