”மனதுக்கு உற்ற நண்பன் உடல்தான்..உடலுக்கு உற்ற நண்பன் மனம்தான்!”- மனஅமைதி வேண்டுமா?.. இதை கடைபிடிங்க!

” உலக மனநல தினம்“ ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகின்றது. இத்தினத்தன்று மனநலனை எவ்வாறு காக்க வேண்டும்? அதற்கான வழிகள் யாது என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் ரவிசங்கர்.
உலக மனநல தினம்
உலக மனநல தினம்முகநூல்

தனி ஒருவரின் மனநலம் என்பது பொது நலனுக்கு வழிவகுக்கும் ஒரு மார்க்கம். உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்தினையும் சமநிலையில் வைத்திருப்பதே நாம் துவங்கும் ஒவ்வொரு காரியத்தையும் நேர்த்தியாகவும், நிறைவாகவும் செய்து முடிக்க உதவும்.

உலக மனநல கூட்டமைப்பு (WFMH) என்பது 1990 களின் முற்பகுதியில் ”உலக மனநல தினத்தை“ அக்டோபர் 10 ஆம் தேதி கடைபிடிக்க வலியுறுத்தியது.

WHO இன் கூற்றுப்படி, உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு எட்டு நபர்களில் ஒருவர் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கிறது. எனவே மனநலம் என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

மனநலனை எவ்வாறு காக்க வேண்டும்? அதற்கான வழிகள் யாது? என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் ரவிசங்கர்.

மனநல மருத்துவர்  ரவி சங்கர்
மனநல மருத்துவர் ரவி சங்கர் Pt

மனமும் உடலும் உற்ற நண்பர்கள்

மனநல தினத்தன்று நாம் பேணிகாக்க வேண்டியது நம் மனதை தான். ”மனதுக்கு உற்ற நண்பன் உடல்தான். உடலுக்கு உற்ற நண்பன் மனம்தான்” இவை இரண்டும் தான் எப்பொழுதும் ஒன்றாக இருக்கும்.

வாழ்க்கையில் எதையும் நம்மால் திட்டமிட்டபடி செய்ய முடியாது. வாழ்க்கைதான் நம் பயணத்தை தீர்மானிக்கும்.

அன்றைய கடமையை அன்றே முடித்திடுக!

இன்று உறங்கி நாளை கண் விளிக்கும் போது நேற்றைய நாள் நம்மில் இருந்து இறந்துவிட்டதாகதான் கருத வேண்டும். அடுத்த நாளுக்கு எக்காரணத்தை கொண்டும் நேற்றைய நாளை எடுத்த செல்ல கூடாது.

எனவே நம் அன்றாட வேலையை அன்றைக்கே செய்து முடித்தல் என்பது நன்று. இப்படி செய்தல் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்த்து மன நிம்மதிக்கு வழுவகுக்கும்.

அதேசமயம் இதை செய்யாமல் தவிர்க்கும் போதுதான் ”அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழமொழிக்கு ஏற்றவாறு நம் மனநலன் குன்றலை நம் முகங்களும் கண்களிலுமே வெளிச்சமிட்டு காட்டு கொடுத்துவிடும்.

இன்று என்பதே உண்மை

”நாளை என்பது நிச்சயம் இல்லை. நேற்று என்பது முடிந்த போன பொய், இன்று என்பதே உண்மை”. இப்படி இம்மூன்றையும் கடைபிடித்தாலே வாழ்க்கையில் அதிகபடியான பிரச்னையை சரி செய்து விடலாம்.

அதே சமயம் வாழ்கையின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் பிரச்னை என்பது வந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், அதை நினைத்து கொண்டு இருப்பது ஆள்மனதில் ஒரு வகையான பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் அமைகிறது. அப்பாதிப்பு உடலை பாதிக்கும். இதனால் உடலில் ரத்த அழுத்தம் ஏற்பட்டு சரியாக உணவு எடுத்து கொள்ளாமல் போவது போன்ற உடலின் நலனை பாதிக்கும் காரணியாகவே இது மாறிவிடும். எனவே ”மனநலம் உடல் நலனுக்கு வழிவகுக்கும் என்பதை மறக்க வேண்டாம்.”

மனநலம் உடல் நலம்
மனநலம் உடல் நலம்முகநூல்

சில அறிவுரைகள்:

  • 8 மணி நேரம் நன்றாக தூக்கம் தேவை.

  • அதிக படியான எலட்க்ரானிக் பொருள்களை( செல்போன், மடிக்கணினி) உபயோகிப்பதை கட்டுபடுத்தி, ஒரு நாளைக்கு 2-3 சதவீதம் மட்டுமே உபயோகிக்க என்பது நன்னை பயக்கும்.

சில அறிவுரைகள்:
சில அறிவுரைகள்:முகநூல்
  • சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். குறிப்பாக காலை உணவு என்பது முக்கியம்.இதன் மூலம் அன்றைய தினத்திற்கு தேவையான ஆற்றலை பெற முடியும்.இது உடல் நலனுக்கு வழிவகுக்கும் . எனவே” உடலை பாதுகாப்பது மன நலனுக்கு வழிவகுக்கும்.”

  • ஆசைப்பட்ட விஷயம் கிடைக்கவில்லை என்றால் அதற்காக மனம் வருந்தக் கூடாது. அதற்கு மாற்று வழி என்ன? என்பது பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும்.

  • நல்ல உறக்கம், உடற்பயிற்சி, நண்பர்களுடன் உறையாடுவது, உங்களை நீங்களே ரசிப்பது போன்றவற்றின் மூலம் உங்கள் மன அமைதிக்கு வித்திடுங்கள்.

சுய மரியாதையை இழக்காதீர்கள்

”யாராக இருந்தாலும் சரி, யாருக்காக இருந்தாலும் சரி ”உங்கள் சுய மரியாதையை நீங்கள் மற்றவர்களுக்காக எப்பொழுது விட்டுகொடுக்க ஆரம்பிக்கிறீர்களோ அங்கு தோன்றிருகிறது, மனநலனை கெடுப்பதற்கான தொடக்க புள்ளி.

ஆரம்பத்தில் அனுசரிப்பதாக விளங்குவது, அதுவே நாளடைவில் மன கவலையை உருவாக்கும் காரணியாக மாறுகின்றது. எப்பொழுது சுயமரியாதை என்பது உங்களுக்கு இழக்கப்படுகின்றது என்ற எண்ணம் வெளியாகிறதோ! அப்பொழுது தைரியமாக அதற்கு எதிராக குரல் கொடுங்கள். ”இங்கு யாரும் யாருக்கும் எதற்கும் சலித்தவர்கள் இல்லை.”

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com