\
Tamil Nadu Sees Rise in Premature Deaths Among Men
கோப்புபடம்AI

தமிழகத்தில் ஆண்கள் அகால மரணம் அதிகரிப்பு.. தீர்வு என்ன?

தமிழ்நாட்டில் ஆண்கள் அகால மரணமடைவது அதிகரித்திருப்பது தரவுகள் வழியே தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவான பெருஞ்செய்தியைப் பார்க்கலாம்.
Published on: 

தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தரவுகளின்படி 2025ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 6 லட்சத்து 93 ஆயிரம் மொத்த இறப்புகளில், 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஆண்கள். 2 லட்சத்து 90 ஆயிரம் பெண்கள். ஆண்களில் 86 சதவீத இறப்புகள் 15 முதல் 64 வயதுக்குட்பட்ட உழைக்கும் வயதினரிடையே நிகழ்ந்துள்ளது கவலைக்குரியது. இதனால் பல பெண்கள் இளம் வயதில் கணவனை இழப்பதும் குழந்தைகள் தந்தையை இழப்பதும் கணிசமாக அதிகரித்துள்ளது. சாலை விபத்துகள், தற்கொலை, புகையிலை-மதுப் பழக்கம் மற்றும் ஆரம்பத்தில் கண்டறியப்படாத இதயம், சிறுநீரக நோய்களே ஆண்களின் அகால மரணங்களுக்கு முதன்மைப் பங்களிக்கின்றன.

Stress
StressAI

பெண்களுக்குக் கருவுறுதல் மற்றும் மகப்பேறின்போது முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டுவிடுகிறது. பெரும்பாலான ஆண்கள் 40 வயது வரையும் சிலர் அதற்குப் பிறகும்கூட முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதில்லை. இதனால் அவர்களுக்கு இருக்கக்கூடிய உயிர்க்கொல்லி நோய்களை முற்றிய நிலையிலேயே கண்டறிய முடிவதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Tamil Nadu Sees Rise in Premature Deaths Among Men
காலை உணவு மிகவும் அவசியமானதா? முழுவதுமாக ஏற்க மறுக்கும் நிபுணர்கள்!!

பணியிட அழுத்தத்தைக் குறைத்தல், இளம் வயதிலேயே மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பரிசோதனை வசதிகளை அதிகரித்தல், சாலை விபத்துகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல், இளைஞர்கள் மது மற்றும் புகைப்பழக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துதல், மனநல ஆலோசனை மையங்களை அதிகரித்தல் என ஆண்கள் அகால மரணத்தைத் தடுப்பதற்கான பல்வேறு பரிந்துரைகளை மருத்துவ நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கு இணையாக ஆண்கள் நலனுக்கும் முன்னுரிமை அளித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று பொது சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்

Tamil Nadu Sees Rise in Premature Deaths Among Men
பால் இல்லாமல் தயாரிக்கப்படும் அனலாக் பனீரை 'பனீர்' பெயரில் விற்க தடை.. கட்டுப்பாடு விதித்த FSSAI!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com