செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பதிவு செய்ய கட்டணம் நிர்ணயித்தது தமிழக சுகாதாரத்துறை

செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பதிவு செய்ய கட்டணம் நிர்ணயித்தது தமிழக சுகாதாரத்துறை
செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பதிவு செய்ய கட்டணம் நிர்ணயித்தது தமிழக சுகாதாரத்துறை

செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தங்களை பதிவு செய்து கொள்ள கட்டணம் நிர்ணயித்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருமுட்டை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல் படி ART சட்டம் 2021ன் படி கருத்தரிப்பு மையங்களுக்கு பதிவு கட்டணம் நிர்ணயித்தது தமிழக சுகாதாரத்துறை. கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம், மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகை தாய் மையம் என 4 வகை மருத்துவ மையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது.

மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருப்பதை தொடர்ந்து தமிழக அரசு கருத்தரிப்பு மையங்களை உடனே பதிவு செய்யவும், கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50ஆயிரம் ரூபாயும், கருப்பையில் செலுத்தும் லெவல் 1 தரத்தில் இருக்கும் மையத்திற்கு 50,000 ரூபாயும், தியேட்டருடன் கூடிய கருதரிப்பு மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும், பிரசவம் வரை சிகிச்சையளிக்கும் தியேட்டருடன் கூடிய வாடகை தாய் மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதற்கான கடைசி தேதி இம்மாதம் 24ம் தேதியாகவும் தெரிவித்துள்ளது. இந்த பதிவு கட்டணத்தை Online SBI என்ற இணைய தளம் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த அறிவித்துள்ளது.

இதன் மூலம் போலி கருத்தரிப்பு மையங்கள் செயல்படாமல் தடுக்க முடியும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பதிவு கட்டணத்தை பாதியாக செலுத்தி மறுபதிவு செய்து கொள்ளவும், இந்த நடைமுறை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் மறு பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com