Study Reveals Genetics Shape Human Longevity 55 pc
model imagemeta ai

ஆயுட்காலத்தைத் தீர்மானிக்கும் காரணி எது? 55% மரபணுவின் பங்கு.. ஆய்வில் புதிய தகவல்!

ஒருவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்பதை உணவுப் பழக்கம் அல்லது உடற்பயிற்சி மட்டுமே தீர்மானிப்பதில்லை; அதில் 50 சதவீதத்துக்கும் மேல் மரபணுக்களுக்கே பங்கு உண்டு என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது
Published on

ஒருவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்பதை உணவுப் பழக்கம் அல்லது உடற்பயிற்சி மட்டுமே தீர்மானிப்பதில்லை; அதில் 50 சதவீதத்துக்கும் மேல் மரபணுக்களுக்கே பங்கு உண்டு என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஒருவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்பதை உணவுப் பழக்கம் அல்லது உடற்பயிற்சி மட்டுமே தீர்மானிப்பதில்லை; அதில் 50 சதவீதத்துக்கும் மேல் மரபணுக்களுக்கே பங்கு உண்டு என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம். சயன்ஸ் (Science) என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியான ஆய்வு முடிவுகளின்படி ஒருவரின் ஆயுள்காலத்தைத் தீர்மானிப்பதில் மரபணு முக்கியப் பங்கு வகிக்கிறது. விபத்துகள் அல்லது தொற்றுநோய்கள் போன்ற வெளிப்படையான காரணங்களைத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு மனிதரின் ஆயுட்காலத்தில் 55 சதவீதம் மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது. இது முந்தைய கணிப்புகளைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

Study Reveals Genetics Shape Human Longevity 55 pc
model imagemeta ai

டென்மார்க், ஸ்வீடன் நாடுகளைச் சேர்ந்த இரட்டையர்களின் ஆயுட்கால தரவுகளைக் கொண்டு இஸ்ரேலின் வைஸ்மேன் அறிவியல் நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது. கடந்த காலங்களில் தொற்றுநோய்களாலும் விபத்துகளாலும் ஏற்படும் மரணங்கள் அதிகமாக இருந்ததால், மரபணுவின் உண்மையான தாக்கம் மறைக்கப்பட்டிருந்தது. தற்போது மருத்துவ வசதிகள் பெருகியுள்ள நிலையில், மரபணுக்களே நீண்ட ஆயுளுக்கு மிக முக்கியக் காரணமாக விளங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், மீதமுள்ள 45 சதவீத வாய்ப்பு உணவு மற்றும் வாழ்க்கை முறையிலேயே உள்ளது என்பதை விஞ்ஞானிகள் நினைவூட்டுகின்றனர்.

Study Reveals Genetics Shape Human Longevity 55 pc
ஒரே ஒரு சிகரெட்.. ஆண்களுக்கு 17 நிமிடம், பெண்களுக்கு 22 நிமிடம்.. குறையும் ஆயுட்காலம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com