பை போலார்
பை போலார்முகநூல்

‘இனி Bipolar disorder-ஐ ரத்தப்பரிசோதனை மூலம் சுலபமாக கண்டறியலாம்’ - ஆய்வு!

பை போலார் எனப்படும் மன அழுத்தத்துடன் கூடிய மனக் கொந்தளிப்பை ரத்தப்பரிசோதனை மூலம் சுலபமாக கண்டறியலாம் என இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது.
Published on

பை போலார் எனப்படும் மன அழுத்தத்துடன் கூடிய மனக் கொந்தளிப்பை ரத்தப்பரிசோதனை மூலம் சுலபமாக கண்டறியலாம் என இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது.

தீவிர மன அழுத்தத்திற்கும், பை போலார் நோய்க்கும் அறிகுறிகள் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதால் வேறுபாட்டை அறியாமல் பொதுவாக மன அழுத்தத்திற்கான மருந்துகள் தரப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 2018-2020 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 5 ஆண்டுகளாக தொடர் மன அழுத்த சிகிச்சை பெற்று வரும் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

பை போலார்
இந்தியர்களிடம் அதிகரிக்கும் வயிறு பிரச்னை... உணவு முறையில் மாற்றம் தேவையா?

ஸ்பெக்ட்ரோமெட்ரி என்ற நவீன கருவியின் உதவியுடன் ரத்த செல்களில் உள்ள 600 க்கும் அதிகமான வேறுபட்ட என்சைம்கள், மூலக்கூறுகளை ஆய்வு செய்து கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் பை - போலார் ரத்தப்பரிசோதனை கண்டறிப்பட்டுள்ளது. ரத்த அணுக்களில் உள்ள மூலக்கூறுகள் மற்றும் என்சைம்களில் என்ன மாதிரியான மாற்றம் ஏற்பட்டால் பை-போலார் கோளாறு ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்பதையும் கேம்பிரிட்ஜ் ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com