இந்த ஆரம்பகால அறிகுறிகள் புற்றுநோய்க்கு வழிவகுக்குமா? அலட்சியம் வேண்டாம்

புற்றுநோயினால் ஏற்படும் பாதிப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மேலும் பெரும்பாலானோர், அதன் ஆரம்ப கால அறிகுறிகளை அலட்சியமாக விடுவதே தீவிர புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக அமைகிறது.
புற்று நோய்
புற்று நோய்ஃபேஸ்புக்

புற்றுநோயினை பொறுத்தவரை பெயரை கேட்டாலே அச்சத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. புற்றுநோய் என்றாலே மரணம்தான் என்ற எண்ணம் பெரும்பாலானோருக்கு இருப்பதை காணலாம். ஆனால் அதனைக் ஆரம்பக்காலத்தில் கண்டறிந்தால் சரிசெய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மார்பகப் புற்றுநோய், விதைப்பை புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் என்று பல வகையான புற்று நோய்கள் இருப்பதை வகைப்படுத்தப்படுகின்றனர்.

Cancer Research UK நடத்திய ஆய்வு ஒன்றின் கருத்துப்படி, ”இங்கிலாந்தில் பாதிக்கும் மேற்பட்டவர்களில் சில சமயங்களில் புற்றுநோயின் அறிகுறிகளாக கூறப்பட்டவைகளில் ஒன்றை அனுபவிக்கிறார்கள். 2 சதவீதம் பேர் இதனால் பாதிக்கப்பட்டும், மூன்றில் ஒரு பங்கு இந்த அறிகுறிகளை முற்றிலும் புறக்கணிக்கணிக்கிறார்கள்.” என்று கூறுகிறது.

புற்று நோய்
“இப்போதும் பரவுகிறது, இப்போதும் உருமாறுகிறது, இப்போதும் உயிரை கொல்கிறது கொரோனா” - WHO வேதனை!

மேலும், அமெரிக்க புற்றுநோய் சங்கம், புற்றுநோய்க்கான பொதுவான ஆரம்ப கால சில அறிகுறிகளை தெரிவிக்கிறது. இந்த அறிகுறிகள் இருப்பின், நிச்சயம் அதனை அலட்சியமாக விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

அவையாவன, “ உடல் எடை இழப்பு, எதிர்பாராமல் அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சருமத்தில் ஏற்படும் மாற்றம், உடலில் இருந்து கழிவுகள் வெளியேறும்போது ஏற்படும் மாற்றம், உடலில் கட்டிகள், இரத்தப்போக்கு ” போன்றவை ஆரம்பகால அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கிறது.

உடல் எடை இழப்பு:

காரணம் இல்லாமல் உடல் எடை குறைவது. கணையம் , வயிறு, உணவுக்குழாய், நுரையீரல் போன்ற புற்றுநோயால் இந்தவகை காரணமற்ற உடல் எடை இழப்பு ஏற்படலாம்.

தகுந்த காரணம் இல்லாமல் 5 கிலோ அல்லது அதற்கு மேற்பட்டதாக உடல் எடை குறைந்தால் நிச்சயம் இதில் கவனம் தேவை.

எதிர்பாராத காய்ச்சல்:

அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவது. ரத்தப்போக்கு புற்றுநோய் போன்றவற்றின் ஆரம்பக்கட்டத்தில் ஏற்படும் அறிகுறி. நோயெதிர்ப்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுவதால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

சருமத்தில் ஏற்படும் மாற்றம்:

சருமத்தில் ஏற்படும் சருமம் கருமையாதல், அதிகப்படியான முடி வளர்ச்சி, தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றவை தோல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

உடலில் இருந்து கழிவுகள் வெளியேறும்போது மாற்றம்:

அசாதாரண மலச்சிக்கல் , வயிற்றுப்போக்கு போன்றவை பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாகவும், சிறுநீர் கழிக்கும்போது அதன் அளவு குறைவாகவே அதிகமாகவே கழிப்பது, சிறுநீரில் இரத்தம், வலி ஆகியவை சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு காரணமாகவோ இருக்கலாம்.

உடலில் கட்டிகள்:

புற்றுநோய் என்றாலே பெரும்பாலும் அவை கட்டிகளாகவே வெளிப்படுகின்றன.

மேலும் இவை மார்பகங்கள், நிணநீர் கணுக்கள் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கு இவ்வகைகட்டிகள் காரணமாக காணப்படுகிறது.

இரத்தப்போக்கு :

கர்ப்பப்பையில் அசாதாரணமாக இரத்தப்போக்கு ஏற்பட்டால் அவை கருப்பை புற்றுநோய்க்கும், சிறுநீரில் இரத்தம் வருவது சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கும், மலத்தில் இரத்தம் வடிதல் மலக்குடல் புற்றுநோய்க்கும், இருமும்போது ரத்தம் வடிதல் நுரையீரல் புற்றுநோய்க்கும் ஆரம்ப கால அறிகுறிகளாக இருக்கலாம்.

உடல்வலி:

ஆனால் உடலில் எங்கேனும் விவரிக்க முடியாத, காரணம் இல்லாத தொடர் வலி இருந்தால், அது ஒரு தீவிர உடல் பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். புற்றுநோய் ஆராய்ச்சியின்படி, புற்றுநோய் கட்டிகளானது எலும்புகள், நரம்புகள், போன்ற உடலின் உறுப்புகளில் அழுத்தம் கொடுத்தால் அதிகமான வலி ஏற்படுகிறது. இது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com