மோர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? அதுவே அதிகமானால்..? - ஷாக் கொடுக்கும் பக்கவிளைவுகள்!
இந்திய உணவுகளில் வெயில்காலங்களில் இடம்பெறும் முக்கிய பானங்களில் ஒன்று மோர். மோர் இல்லாத கோடைகாலமா? என்கிற அளவுக்கு அனைவருமே பெரும்பாலும் விரும்பக்கூடியது இது. மோரில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். 245மி.லிட்டர் மோரில் 8 மி.கி புரதமும், 98 கலோரிகளும், 22% கால்சியமும், 22% வைட்டமின் பி12-ம், 3 மி.கி நார்ச்சத்தும், 16% சோடியமும் நிறைந்திருக்கிறது.
- வெயில்காலத்தில் மோர் குடிப்பதால் உடல் குளிர்ச்சியடைகிறது.
- இது செரிமானத்தைத் தூண்டுகிறது
- எலும்புகளை வலிமையாக்குகிறது
- கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது
- சருமத்தை மேம்படுத்துகிறது
- வாய் மற்றும் தொண்டை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மோரின் பக்கவிளைவுகள்
மோரில் உவர்ப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்திருப்பதால்தான் அதனுடன் காரத்தையும் சேர்த்து சுவையாக அருந்த ஆசைப்படுகின்றனர். சிலர் மசாலா மோர் அருந்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். எனினும், சிலருக்கு மோரால் ஒவ்வாமை ஏற்படுகிறது. பெரும்பாலும் இதற்கு காரணம் இதிலுள்ள லாக்டோஸ் தான். சிலருக்கு இதில் அடங்கியுள்ள உப்பை முறையாக நீக்காததும் ஒவ்வாமைக்கு காரணமகிறது. குறைந்த கொழுப்பு வகை உணவாக நினைத்து மோரை எடுத்துக்கொள்ள விரும்பினால் இதில் அதிக சோடியம் இருக்கிறது என்பதை மறக்கவேண்டாம்.
தினசரி மோர் எடுத்துக்கொள்பவராக இருந்தால் இந்த பக்கவிளைவுகளையும் கருத்தில்கொள்ளுங்கள்.
மகரந்த ஒவ்வாமை: சிலருக்கு நுண்ணிய துகள்களால் ஒவ்வாமை ஏற்படும். எனவே இரவில் மோர் குடிப்பதை தவிர்க்கவும். இதனால் காய்ச்சல், சளி மற்றும் மகரந்த ஒவ்வாமையை தவிர்க்கலாம்.
சிறுநீரக நோய்கள் மற்றும் டென்ஷன்: மோரில் அதிக சோடியம் இருப்பதால் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. மேலும் அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை தவிர்க்கலாம். நீண்ட நாட்கள் சோடியம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளும்போது அது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கு தொற்று: புளித்த தயிரிலிருந்து வெண்ணெய் எடுக்க நீண்ட நாட்கள் வைக்கப்படுகிறது. வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரே மோராகிறது. நீண்ட நாட்கள் வைக்கப்பட்ட இதை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கலாம். இதிலுள்ள பாக்டீரியா குழந்தைகளுக்கு சளி மற்றும் தொண்டை தொற்றை ஏற்படுத்தும்.