நோன்பு கஞ்சிக்கென்று இவ்வளவு தனி சிறப்பு உள்ளதா? எப்படியெல்லாம் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது?

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தில், உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் இதம் தரும் நோன்புக் கஞ்சிக்கென்று தனி சிறப்பு உள்ளது என்பதை மறுக்கமுடியாது.
நோன்பு கஞ்சி
நோன்பு கஞ்சி அ.அப்துல் அலீம்

நோன்பு கஞ்சி உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தருவது மட்டுமல்லாமல், சமதர்ம சமுதாயத்தை படைக்கும் ஆற்றல் பெற்றது என்று சொன்னால் சந்தேகமில்லை.

நோம்பு எதனால் கடைபிடிக்கப்படுகிறது?

நோன்பு உங்களுக்குக் கேடயமாக இருக்கிறது என்கிறது இஸ்லாம். ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருப்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன், இறைவனிடமிருந்து முகம்மது நபிக்கு அருளப்பட்டது. இதன் காரணமாக ரமலான் புனித மாதமாக இஸ்லாமியர்களால் கருதப்படுகிறது.

நோன்பு கஞ்சி
நோன்பு கஞ்சிசெய்தியாளர் / அ.அப்துல் அலீம்

ரமலான் மாதம் 30 நாட்கள் முழுவதும் நோன்பிருப்பது இஸ்லாமியர்களின் கடமைகளுள் ஒன்று. அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக தொடங்கி மாலை சூரிய அஸ்தமானம் வரை உண்ணாமல், நீர் அருந்தாமல், எச்சில் கூட விழுங்காமல் கடுமையாக விரதம் இருக்கின்றனர். மாலையில் சூரியன் மறைந்த பிறகு, நோன்பு துறந்து உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அனைத்து சமூகத்தினரும் நோன்புகஞ்சியை அருந்தலாம்!

அப்படி காலையில் இருந்து மாலை வரை எந்த உணவும் உண்ணாமல் இருந்து, நோன்பு திறந்த பிறகு திட உணவுகளை உண்பதால், அது உடலுக்குச் சில தொந்தரவுகளைத் தர வாய்ப்பு உள்ளது. அதைத் தவிர்ப்பதற்காகவும், நோன்பிருப்பவர்கள் உடனடியாகப் புத்துணர்ச்சிப் பெற உதவும் ஓர் அற்புதமான உணவே 'நோன்புக் கஞ்சியாகும். இதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இந்த நோன்புக்கஞ்சியை நோன்பு இருப்பவர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும் குடித்தால், அது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் என்பதால், ரமலான் நோன்புக்கஞ்சி இஸ்லாமியர்கள் தவிர அனைத்து சமூகத்தினரும் விரும்பி அருந்தக்கூடிய உணவாக உள்ளது.

நோன்பு கஞ்சி
நோன்பு கஞ்சிசெய்தியாளர் / அ.அப்துல் அலீம்

ரமலான் மாதம் 30 நாட்களுக்கும் அனைத்து மசூதிகளிலும், அப்பகுதி மக்களுக்காக பிரத்யேகமாக நோன்பு கஞ்சி தயாரிக்கப்படுகின்றது. இது தவிர தனிநபர்கள் தனியாக வீடுகளில் கஞ்சி தயாரித்து ஏழைகளுக்கும் வழங்குகின்றார்கள். மசூதிகளில் அதிகாலை முதல் இந்த நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணி தொடங்கி, பிற்பகலில் நிறைவு பெற்றவுடன், அதை மண்கோப்பை அல்லது சில்லவர் கோப்பைகளில் ஊற்றி இரண்டு மணி நேரம் ஆறவிடுவார்கள். அதன்பின்பு நோன்பு திறக்க வருபவர்களுக்கு இந்த கஞ்சி பறிமாறப்படுகின்றது.

பொது இடங்கள் எல்லா இடத்திலும் நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது!

இவை மட்டுமின்றி பொது இடங்கள், அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளிலும், இந்த நோன்பு கஞ்சி பிரதானமாக இருக்கின்றது. இவ்வாறு உடல், மனம் இரண்டுக்கும் இதம் தரும் நோன்புக் கஞ்சி, நோன்பிருப்பவர்கள் உடனடியாகப் புத்துணர்ச்சிப் பெற உதவும் ஓர் அற்புதமான உணவாக உள்ளது.

நோன்பு கஞ்சி
நோன்பு கஞ்சிசெய்தியாளர் / அ.அப்துல் அலீம்

கிட்டத்தட்ட 14 மணி நேரம் கடும் விரதம் இருக்கக்கூடியவர், இந்த நோன்புக் கஞ்சியைk குடிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகின்றது. குறிப்பாக நோன்பு இருப்பதால், நம் உடலில் உள்ள தேவையற்ற ரசாயனப் பொருள்கள் சுத்தப்படுத்தப்படும். நோன்பு ஆரம்பித்து முதல் இரண்டு நாட்கள் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.

மேலும், உடலில் நீர்வறட்சி ஏற்படும். இதைத் தவிர்க்க நோன்பு காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான உணவு நோன்புக்கஞ்சி. இது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 'கஞ்சி' என்று அழைக்கப்படுகிறது.

நார்ச்சத்து பொருட்கள், பருப்பு வகைகள் சேர்க்கப்படுகின்றன!

நோன்புக்கஞ்சியை சாப்பிட்டதும், நம் உடலில் நீர்வறட்சி சரியாகி உடல் சராசரி நிலைக்கு வந்துவிடும். மேலும், நாள் முழுவதும் நோன்பு இருப்பதால், உடல் சூடாகி விடும். நோன்புக் கஞ்சியில் வெந்தயம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், தேங்காய் பால் உள்ளிட்ட பல்வேறு பருப்பு வகைகளும் சேர்க்கப்படுவதால் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தருகிறது.

நோன்பு கஞ்சி
நோன்பு கஞ்சிசெய்தியாளர் / அ.அப்துல் அலீம்

நாள் முழுவதும் உணவு உண்ணாமல் இருப்பதால், நம் வயிற்றுக்கு அரைக்கும் வேலை இருக்காது. அதனால் நாம் நோன்பு திறந்த பிறகு உடனடியாக முழுமையான திடப் பொருள்களை உண்ணும்போது, வயிற்றுத் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, நோன்புக் கஞ்சி போன்ற திரவ உணவை உட்கொண்டால், அது நன்றாக செரிமானமாகும். மேலும் நோன்பு கஞ்சியில் சுவையை அதிகரிக்க ஆட்டுக்கறி, கோழி சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கும்.

நோன்பு கஞ்சி
நோன்பு கஞ்சிசெய்தியாளர் / அ.அப்துல் அலீம்

மேலும் நோன்புக்கஞ்சி வயிற்றில் உள்ள கழிவுகளைச் சுத்தப்படுத்தும், அல்சர் தொந்தரவுகளையும் சரி செய்யும். கஞ்சியில் சேர்க்கப்படும் கொத்தமல்லி, புதினா, மஞ்சள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, தக்காளி ஆகியவை நம் வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. எளிதில் செரிமானம் ஆகக்கூடிய எளிய வகை உணவாக இருக்கிறது. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலையும் தீர்க்கும் வேலையை செய்கிறது.

சமதர்ம சமுதாயத்தை படைப்பதில் நோன்பு கஞ்சி முக்கியபங்கு வகிக்கிறது!

நோன்புக் கஞ்சியானது வயிறு நிறைந்த ஓர் உணர்வைத் தரக்கூடியது. அதற்கும் மேலாக உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துகளையும் தரக்கூடியது. நோன்பு இருப்பவர்கள் மட்டுமின்றி அனைவரும் இதை உட்கொள்ளலாம். ஆகவே நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் இந்த நோன்பு கஞ்சியை பிற சகோதர சமயத்தை சேர்ந்தவர்களுக்கும் வழங்கி மகிழ்கின்றனர்.

நோன்பு கஞ்சி
நோன்பு கஞ்சிஅ.அப்துல் அலீம்

நோன்பு கஞ்சி இது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தருவது மட்டுமல்லாமல் சமதர்ம சமுதாயத்தையும் படைக்கும் ஆற்றல் பெற்றது என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com