”யார் சொல்லியும் கேட்கல” - ’வேகன் இன்ஃபுளுயன்சர்’ ஜன்னா சாம்சோனோவா 39 வயதில் பட்டினியால் மரணம்!

வேகன் உணவு முறையை முழுமையாக பின்பற்றி வந்த ஜன்னா தன்னுடைய கடைசி நாட்களில் பட்டினியில் இறந்ததாக கூறப்படுகிறது.
vegan eater
vegan eaterTwitter

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஜன்னா சாம்சோனோவா. தான் பின்பற்றி வந்த வேகன் உணவு முறைக்காக சமூக ஊடகங்களில் பிரபலமாக வலம்வந்த அவர் தனது 39 வயதில் பரிதாபமாக காலமானார்.

ஜன்னா சாம்சோனோனா கடந்த 10 ஆண்டுகளுக்கு பச்சை தாவரங்களை கொண்ட வேகன் உணவு முறையை முழுமையாக பின்பற்றி வந்தார். பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று அங்குள்ள பச்சைக் காய்கறிகளை உண்ணும் வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் லைவ் ஆக பகிர்ந்து வந்தார்.

பச்சை தாவர வகைகளில் பெரிய இனிப்பு பலாப்பழம், துரியன், துர்நாற்றம் கொண்ட காரமான பழங்கள் ஆகிய பலவும் அடங்கும். வித்தியாசமான இவரது உணவு முறைக்காக இவருக்கு நிறைய ஃபாலோவர்கள் இருந்தார்கள்.

vegan eater
vegan eaterTwitter

இத்தகைய சூழலில்தான் தென்கிழக்கு ஆசியாவின் பயணத்தின் போது, உடல் சோர்வு மற்றும் கால்கள் வீக்கம் போன்ற பிரச்னைகள் அவருக்கு ஏற்பட்டுள்ளது. மருத்துவரின் உதவியை நாடுமாறு அவரது நண்பர்கள் தரப்பில் அறிவுரை கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் தனது உடல்நலனை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து பயணம் செய்துள்ளார். நண்பர்களிடம் சொல்லிக் கொள்ளாமலேயே அடுத்தடுத்து இடங்களுக்கு தன்னுடைய பயணத்தை தொடர்ந்துள்ளார். இதானல் துரதிர்ஷ்டவசமாக, அவர் ஜூலை 21, 2023 அன்று காலமானார்.

இது குறித்து அவரது தாயார் கூறுகையில் “ஜன்னாவின் உடல்நிலை மோசமடைந்ததற்கு, அவளது கடுமையான சைவ உணவு முறை மற்றும் காலரா போன்ற நோய்த்தொற்றின் கலவை போன்றவைதான் காரணம்” என்றார்.

குறிப்பு: உணவு பழக்கம் என்பது யாரோ சொல்கிறார்கள் என்று அப்படியே பின்பற்றுவது தவறானது. அதனால் ஏற்படும் சுகாதார பின்விளைவுகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அவரவர் உடலுக்கு ஏற்றார் போல எந்த பிராந்தியத்தின் வாழ்கிறோம் என்பதை பொறுத்து உணவின் தேவை மாறுபடும். எனவே நமக்கு தேவையானதை அறிந்து உண்பது என்பது முக்கியம்!

- Jenetta Roseline s

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com