“இனி நாடு முழுவதும் மருந்து மாத்திரை அட்டைகளில் QR Code” – மருந்து நிறுவனங்கள்

நாடு முழுவதும் உள்ள 300 மருந்து நிறுவனங்கள், தங்கள் மருந்துகளின் அட்டைகளில் QR குறியீடுகளை அச்சிட்டு வழங்க உள்ளன. இனி தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் QR Code கொண்டவையாக இருக்கும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், QR Code குறித்து மத்திய சுகாதார அமைச்சகம், 300 மருந்து பிராண்டுகளை பட்டியலிடுமாறு மருந்து விலை நிர்ணய ஆணையத்திடம் கேட்டுக் கொண்டது. ஆணையம் கொடுத்த பட்டியலின் அடிப்படையில் வலி நிவாரணிகள், கருத்தடை மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள், இரத்த சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்த மருந்துகள் போன்ற பரவலாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் பட்டியலிடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அந்த 300 பிராண்டுகளின் உற்பத்தியாளர்கள், தங்கள் பேக்கேஜிங்கில் QR குறியீட்டை இணைக்கும் முறையை தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர். அந்த QR குறியீடுகளில் மருந்துகளின் தனிப்பட்ட தயாரிப்பு அடையாளக் குறியீடு, மருந்தின் சரியான மற்றும் பொதுவான பெயர், பிராண்ட் பெயர், உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி, உற்பத்தி செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி மற்றும் உற்பத்தி பற்றிய தகவல்கள் உள்ளன.

போலி மருந்துகளை தடுக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் மருந்து உற்பத்தியாளர்கள். தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் சங்கம், பெரிய மருந்து நிறுவனங்களின் பிரதிநிதியாகிய 'இந்திய மருந்துக் கூட்டணி' தொழில் ரீதியாக இந்த மாற்றத்திற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான சன்பார்மா சூட்டிகல் இண்டஸ்ட்ரீஸும் QR Code மாற்றத்திற்கு தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

sun pharma
sun pharmapt desk

QR Code-ஐ கூடுதலாக அச்சிடுதல் காரணமாக 5-7 % செலவு அதிகரிக்கும் என்பதால், மருந்துகளின் விலையும் அதிகரிக்கும் என மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) கணித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com