உருளைக்கிழங்கு லவ்வரா? இந்த பக்க விளைவுகளை தெரிந்துகொள்வது அவசியம்!

உருளைக்கிழங்கு லவ்வரா? இந்த பக்க விளைவுகளை தெரிந்துகொள்வது அவசியம்!
உருளைக்கிழங்கு லவ்வரா? இந்த பக்க விளைவுகளை தெரிந்துகொள்வது அவசியம்!

உலகளவில் பெரும்பாலானவர்களின் ஃபேவரைட் உணவு பட்டியலில் உருளைக்கிழங்கு எப்போதும் மேலேதான் இருக்கிறது. ஒவ்வொரு ஊர் மற்றும் நாடுகளில் அந்தந்த கலாசாரத்திற்கு ஏற்ப உணவுகளை ருசியாக சமைத்து சாப்பிடுவது வழக்கம். வறுத்தோ, வேகவைத்தோ, மசித்தோ எப்படி வேண்டுமானாலும் பிற காய்கறிகள், அசைவத்துடன் சேர்த்தோ அல்லது தனியாகவோ சமைத்து சாப்பிட உருளைக்கிழங்கு சிறந்த உணவு.

எப்படியாயினும் பெரும்பாலும் மருத்துவர்கள் உருளைக்கிழங்கை அளவாக சாப்பிடவேண்டும் என பரிந்துரைக்கின்றனர். அதிகமாக உருளைக்கிழங்கு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தில் என்னென்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம். உருளைக்கிழங்கில் ஊட்டச்சத்துகள் அதிகம் இருந்தாலும், கார்போஹைட்ரேட்டுகளும் அதிகளவில் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் உருளைக்கிழங்கை சாப்பிடும்போது அதிலுள்ள நன்மை தீமைகளை அறிந்திருப்பது நமது உடல் அமைப்புக்கு ஏற்றவாறு எந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம் என்பதை நாம் முடிவுசெய்ய உதவும்.

1. நீண்ட நேரம் பசிக்காது

உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் இருப்பதால் நீண்ட நேரம் பசி உணர்வை தூண்டாது. மேலும் இடையிடையே நொறுக்குத்தீனி சாப்பிடவும் தோன்றாது. இதனால்தான் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தங்கள் காலை உணவில் உருளைக்கிழங்கை சேர்த்துக்கொள்கின்றனர்.

2. சர்க்கரை அளவை அதிகரிக்கும்

கார்போஹைட்ரேட்டுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். அதிலும் உருளைக்கிழங்கை வறுத்து சாப்பிடும்போது அது இன்னும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவேதான் பெரும்பாலும் புரதச்சத்து உணவுகளான சிக்கன், மீன் மற்றும் முட்டை போன்ற உணவுகளுடன் உருளைக்கிழங்கை சேர்த்து சாப்பிடவேண்டும்.

3. எடை அதிகரிப்பு வழிவகுக்கும்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் டயட்டில் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்துக்கொள்வர். அதேசமயம் வறுத்த உருளைக்கிழங்கு எடையை அதிகரிக்கும். மேலும் உருளைக்கிழங்குடன் சாஸ் மற்றும் மயோனிஸ் போன்றவற்றை சேர்ப்பது மேலும் கலோரிகளை கூட்டுவது எடை அதிகரிப்பை தூண்டும்.

4. சரும ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல

வறுத்த உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிடுவது AGEs என்று சொல்லக்கூடிய மேம்பட்ட கிளைகேஷன் அளவை உருவாக்கும். இது சருமத்தில் படிவதால் சீக்கிரத்தில் வயதான தோற்றத்தை உருவாக்கும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com