நாடு முழுவதும் 35 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்

நாடு முழுவதும் 35 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்
நாடு முழுவதும் 35 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்

பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 35 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 1.84 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட ஆலையும் உள்ளது. இவை அனைத்தையும் காணொலி வழியாக திறந்து வைத்துள்ளார் பிரதமர் மோடி. 

உத்தரகாண்டிலுள்ள எய்ம்ஸ் ரிஷிகேஷிலிருந்து பிரதமர் இந்த காணொலி நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். நிகழ்ச்சியின்போது உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் பிரதமருடன் இருந்தனர். உரையின்போது, இத்திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் கிடைக்கப்பெறும் எனக்கூறியுள்ளார் மோடி.

இதுவரை பி.எம்.கேர்ஸ் தரும் நிதியின் கீழ், மொத்தம் 1,224 ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட ஆலை செயல்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com