\
கொரோனா பாதிப்பால் மூளை செயல்பாட்டில் மந்தம் - ஆய்வறிக்கையில் தகவல்

கொரோனா பாதிப்பால் மூளை செயல்பாட்டில் மந்தம் - ஆய்வறிக்கையில் தகவல்

கொரோனா பாதிப்பால் மூளை செயல்பாட்டில் மந்தம் - ஆய்வறிக்கையில் தகவல்
Published on

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் மூளை செயல்பாட்டில் மந்தம் ஏற்படுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. NATURE எனும் மருத்துவ இதழில் ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், லேசான கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மூளையிலும் பாதிப்புகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் மற்றும் தொற்று ஏற்படாதவர்களின் மூளை செயல்பாட்டை ஆய்வு செய்துள்ளனர். வழக்கமாக 10 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய நினைவுத்திறன் பாதிப்பு, கொரோனாவுக்கு ஆளானவர்களுக்கு ஏற்படுவதாக இதில் கண்டறியப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com