அசைவம் சாப்பிடதாவர்கள் ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகளை சேர்த்துக்கொள்வது அவசியம்

அசைவம் சாப்பிடதாவர்கள் ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகளை சேர்த்துக்கொள்வது அவசியம்
அசைவம் சாப்பிடதாவர்கள் ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகளை சேர்த்துக்கொள்வது அவசியம்

அசைவம் சாப்பிடதாவர்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சேர்த்துக்கொள்ள சில உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இதுகுறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

வேகன் டயட் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். பொதுவாக தாவரங்கள் அடங்கிய உணவு என்பது நமக்குத் தெரியும். இந்த டயட் எடைக்குறைத்தல், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்தல், இதய நோய் அறிகுறிகளைக் குறைத்தல் போன்ற பல நன்மைகளைக் கொடுக்கிறது. அதேசமயத்தில் வெறும் சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உடலில் சேரும்படி, சரிவிகித டயட்டை கடைபிடிப்பதும் அவசியம். இந்த டயட் சிறந்தது என்றாலும் சரிவிகித முறையில் எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மனநலத்திற்கு பலவகைகளில் உதவுகிறது. இது மன அழுத்தம், மன பதற்றத்தைக் குறைக்கிறது. இந்த நல்லகொழுப்பானது கண்பார்வையையும் மேம்படுத்துகிறது.

இத்தகைய நன்மைகள் நிறைந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது பெரும்பாலும் பால் மற்றும் அசைவ உணவுகளில் இருந்துதான் கிடைக்கிறது என்ற கருத்து பெரும்பாலும் பரவிவருகிறது. ஆனால் சில சைவ உணவு வகைகளிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது.

சியா விதைகள், பிரஸ்ஸல்ஸ் முளைகள், அக்ரூட் பருப்புகள், சணல் விதைகள், ஆளிவிதை, சோயாபீன் எண்ணெய் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் தேவையான அளவில் நிறைந்துள்ளது. ஒருநாளைக்கு ஆணுக்கு 1.6கிராமும், பெண்ணுக்கு 1.1 கிராமும் ஒமேகா 3 அமிலத்தை எடுத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com