மீசோதெலியோமா என்னும் கொடிய புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து அசத்திய மருத்துவர்கள்!

மீசோதெலியோமா என்னும் கொடியவகை நுரையீரல் புற்றுநோய் கட்டிகளை கொல்லும் மருந்தினை கண்டுப்பிடித்து இங்கிலாந்து மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.
மீசோதெலியோமா - மருத்து
மீசோதெலியோமா - மருத்துfreepik

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொடிய வகையான மீசோதெலியோமா என்னும் நுரையீரல், இதயம் அல்லது அடிவயிற்றின் புறணியில் ஏற்படும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்நோய்க்கு இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த மருத்துவர்கள் குழுவொன்று மருந்து கண்டுபிடித்து அசத்தியுள்ளது.

மீசோதெலியோமா
மீசோதெலியோமா

தி கார்டியன் பத்திரிக்கையின் கூற்றுப்படி, லண்டனின் குயின்மேரி பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி மற்றும் தைவான்
ஆகிய ஐந்து நாடுகளில் சர்வதேச அளவில் இச்சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

ஆய்வு:

மொத்தம் 294 பேர் இந்த மருந்து கண்டறியும் ஆய்வில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். முதலில் எலிகளின் மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், எலிகளின் வாழ்நாள் நான்கு மடங்கு அதிகமாவதை மருத்துவர்கள் அறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து மனிதர்களில் (புற்றுநோய் உள்ளவர்கள்) இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீசோதெலியோமா - மருத்து
சிசேரியன் செய்த பெண்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகமா? ஆய்வு முடிவு சொல்வதென்ன?

இதில் பங்கேற்ற புற்றுநோயாளிகளுக்கு மூன்று வாரங்களுக்கு ஒரு முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டும், பாதி பேருக்கு ADI-PEG20 (பெகார்கிமினேஸ்) என்ற மருந்தும், பாதி பேருக்கு சத்து மருந்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கீமோதெரபி எடுத்து கொண்டவர்கள் 7.7 மாதங்களும், பெகார்கிமினேஸ் மருந்து எடுத்து கொண்டவர்கள் 9.3 மாதங்களும் உயிர்பிழைத்துள்ளனர்.

இதன்மூலம் இந்த இரண்டு மருந்துகளையும் சேர்த்து எடுத்து கொள்ளும்போது மீசோதெலியோமா என்னும் புற்றுநோயிலிருந்து உயிர்ப்பிழைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் இதில் உட்படுத்தப்பட்டவர்கள் அனைவருமே 70 வயதை கடந்தவர்கள். 20 ஆண்டுகளாக கேன்சருடன் போராடி வந்த அந்த நோயாளிகளுக்கு இந்த மருந்தின் கண்டுபிடிப்பு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

கேன்சர் செல்களை பொறுத்தவரை அர்ஜினைன் என்பது முக்கியமான ஒன்று. தற்போது கண்டுப்பிடிக்கப்பட்ட இம்மருந்தானது அர்ஜினைனின் அளவை குறைப்பதால், கேன்சர் செல்கள் மடிவதற்கு காரணமாக அமைகின்றன.

மீசோதெலியோமா என்றால் என்ன?

இவை ஒரு வகையான புற்றுநோய். குவாரி போன்ற பகுதிகளில் வேலை செய்பவர்களுக்கு அதிகளவில் ஏற்படும் இந்தவகை புற்றுநோய் தாக்கினால் உயிர் பிழைப்பது மிகவும் அரிது என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீசோதெலியோமா
மீசோதெலியோமா
மீசோதெலியோமா - மருத்து
புற்றுநோய்க்கான தடுப்பூசி - “இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டோம்!” - ரஷ்ய அதிபர் புதின்

இந்நிலையில் இம்மருந்தின் கண்டுபிடிப்பு என்பது மீசோதெலியோமா என்னும் நுரையீரல், இதயம் அல்லது அடிவயிற்றின் புறணியில் ஏற்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலான செய்தியாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com