தமிழகத்தில் உயரும் H1N1 ஃப்ளூ வைரஸ்... என்ன காரணம்?- அமைச்சர் மா.சுப்ரமணியம் விளக்கம்

தமிழகத்தில் உயரும் H1N1 ஃப்ளூ வைரஸ்... என்ன காரணம்?- அமைச்சர் மா.சுப்ரமணியம் விளக்கம்
தமிழகத்தில் உயரும் H1N1 ஃப்ளூ வைரஸ்... என்ன காரணம்?- அமைச்சர் மா.சுப்ரமணியம் விளக்கம்

தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 282 பேருக்கு h1n1 இன்போன்சா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 282 பேருக்கு h1n1 இன்போன்சா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருத்துவ துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் இன்று நேரில் ஆய்வு நடத்தினார். அவருடன் மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வநாயகம், கல்லூரி கல்வியாக மருத்துவ கல்லூரி கல்வி இயக்கத்தின் இயக்குனர் நாராயண பாபு உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், “தமிழகத்தில் 282 குழந்தைகள் H1N1 இன்புளூவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். வருடா வருடம் பருவ மழை காலங்களில் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. கோவிட் காலத்தில் இரண்டு வருடமாக முக கவசம் அணிதல் தனிமனித இடைவெளியை சரியாக பின்பற்றியதன் காரணமாக காய்ச்சல் தொற்று பரவல் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது மக்களிடையே அது குறித்த விழிப்புணர்வு குறைந்து விட்டதன் காரணமாக பருவமழை காலத்தில் ஏற்படும் காய்ச்சல் குழந்தைகளுக்கிடையே பரவி வருகிறது.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு நடத்தினோம். இங்கு 121 குழந்தைகள் காய்ச்சலால் சிகிச்சை பெறுகிறார்கள். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 8 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மக்கள் பதற்ற பட வேண்டிய சூழல் இல்லை. பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று சென்னை குழந்தைகள் நல மருத்துவமனை காய்ச்சல் பிரிவில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மருத்துவம் குறித்து விசாரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. @mkstalin #Masubramanian #TNHealthminister #Hospitalinspection pic.twitter.com/DSPPxGUz3P
— Subramanian.Ma (@Subramanian_ma) September 15, 2022

தமிழகத்தில் 243 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர். டெங்குவை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மருந்து தெளிப்பதற்கு 19,313 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்...கொசு வலையில் குழந்தைகளை படுக்க வைக்க பழகி கொள்ளுங்கள் அமைச்சர் மா.சு வேண்டுகோள்..காய்ச்சல், இருமல், தும்மல், சளி போன்றவை குழந்தைகளுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நீர் திவழைகள் மூலம் இந்த நோய் பரவுகிறது.

பொது சுகாதார துறை சார்பில் சுற்றறிக்கை அனைத்து மருத்துவமனைக்கும் பள்ளிகளுக்கும் அனுப்ப பட்டுள்ளது. H1N1, டெங்கு, சாதாரண காய்ச்சலாக பாதிப்புள்ளவர்களை கண்காணிக்க கூறியிருக்கிறோம். மருத்துவர்கள் பரித்துறையின்றி மருந்து கடைகளில் மருந்து வழங்க கூடாது.

டெங்கு, H1NI, சாதாரண காய்ச்சலாக இருந்தால் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவ அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேவையான அளவு மருந்து கையிருப்பு உள்ளது. காய்ச்சல், இருமல், தும்மல், சளி போன்றவை குழந்தைகளுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

தமிழகத்தில் H1N1 பாதிப்பு நிலவரம்: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை - 215; அரசு மருத்துவமனையில் - 54; 13 பேர் வீட்டில் தனிமை படுத்தபட்டுள்ளனர். சென்னையில் H1N1 - 117 பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 887 படுக்கைகளில் 637 படுக்கைகள் நிறைந்துள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 243

டெங்கு காய்ச்சலால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 18 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சலில் இறந்தவர்களின் எண்ணிக்கை - 3

H1N1 இன்புளூவன்சா வைரஸ் தமிழகம் முழுவதும் 282 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வகை வைரசின் மரபணு பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்பட்டது. தற்போது இந்த பதத்தை பயன்படுத்த வேண்டாம் என மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com