மகாராஷ்ட்ரா: 5,000 பேருக்கு பிரசவம் பார்த்த செவிலியர், பிரசவ நேர சிக்கலால் உயிரிழந்த சோகம்

மகாராஷ்ட்ரா: 5,000 பேருக்கு பிரசவம் பார்த்த செவிலியர், பிரசவ நேர சிக்கலால் உயிரிழந்த சோகம்

மகாராஷ்ட்ரா: 5,000 பேருக்கு பிரசவம் பார்த்த செவிலியர், பிரசவ நேர சிக்கலால் உயிரிழந்த சோகம்
Published on

மகாராஷ்ட்ராவில் ஹிங்கோலி மாவட்டத்தில், கிட்டத்தட்ட 5,000 பேருக்கு பிரசவம் பார்த்த 38 வயது செவிலியரொருவர், அவருடைய பிரசவ நேர சிக்கல் காரணமாக உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதி என்ற அந்த செவிலியர், கடந்த நவம்பர் 2-ம் தேதி ஹிங்கோலி மாவட்ட மருத்துவமனையில் அவருடைய இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அப்போது பைலேட்ரல் நிமோனியா என்ற பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

பிரசவ வலி ஏற்படுவதற்கு முந்தைய நாள் வரையிலும் அந்தச் செவிலியர் பணியில் இருந்ததாகவும், பிரசவத்துக்குப் பின்னே சில காலம் விடுமுறை எடுத்துக்கொள்ள அவர் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் பணிபுரிந்த மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ. தெரிவித்துள்ளார். வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சைகள் தரப்பட்ட போதிலும், அவரை காப்பாற்ற முடியாமல் போனதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com