bacteria
bacteria

ஹைதராபாத் கேன்சர் மருந்தில் கண்டறியப்பட்ட உயிருக்கு ஊறு விளைவிக்கும் பாக்டீரியா! - WHO அறிக்கை

செலோன் ஆய்வகத்தின் தயாரிப்பான ஊசிமூலம் செலுத்தக்கூடிய கீமோதெரபி ஏஜென்ட் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒடுக்கும் மருந்தான மெத்தோட்ரெக்ஸேட்டுக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது.
Published on

ஹைதராபாத்திலுள்ள செலோன் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட கேன்சர் மருந்தில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சூடோமோனாஸ் பாக்டீரியா கண்டறியப்பட்டதாக லெபனோன் மற்றும் ஏமன் நாடுகளின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து செலோன் ஆய்வகத்தின் தயாரிப்பான ஊசிமூலம் செலுத்தக்கூடிய கீமோதெரபி ஏஜென்ட் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒடுக்கும் மருந்தான மெத்தோட்ரெக்ஸேட்டுக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அந்த மருந்தின் தொகுதிகளில் ஒன்றில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பாக்டீரியா கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. குழந்தைகளிடம் சில பக்கவிளைவுகளை கவனித்தபிறகு, மருந்தின்மீது சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

doctors
doctors

"மெத்தோட்ரெக்ஸேட் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நோயெதிர்ப்பு அமைப்புகள் பலவீனமாகியிருக்கலாம் மற்றும் நோய்த்தொற்றுகளால் எளிதில் பாதிக்கப்படலாம்" என்று எச்சரிக்கை கூறுகிறது. இந்நிலையில், இந்த மருந்தானது இரண்டு நாடுகளில் கள்ளச்சந்தைகள்மூலம் விற்பனை செய்யப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. MTI2101BAQ என்ற தொகுதியானது இந்தியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் மட்டும் விற்பனை செய்ய உருவாக்கப்பட்ட நிலையில் பிற நாடுகளுக்கும் சட்டவிரோதமாக சென்றிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

LABS
LABS

அதேசமயம், இதுகுறித்து WHO வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தைகளுக்கென்று தயாரிக்கப்படாத இந்த மருந்துகளின் பாதுகாப்பிற்கு உற்பத்தியாளர்கள் உத்தரவாதம் அளிக்கமுடியாது என்று தெரிவித்திருக்கிறது. அதேபோல், இந்த மருந்து மற்ற நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்று கவலைப்படுவதாகவும் முதன்மை சுகாதார அமைப்பு கூறுகிறது. இதனையடுத்து இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com