\
காலிஃப்ளவரை விரும்பி உண்பவரா? அதிலுள்ள நன்மை தீமைகளை தெரிந்துகொள்ளுங்கள்!

காலிஃப்ளவரை விரும்பி உண்பவரா? அதிலுள்ள நன்மை தீமைகளை தெரிந்துகொள்ளுங்கள்!

காலிஃப்ளவரை விரும்பி உண்பவரா? அதிலுள்ள நன்மை தீமைகளை தெரிந்துகொள்ளுங்கள்!
Published on

தினசரி டயட்டில் காய்கறிகள் நிச்சயம் இடம்பெற வேண்டும். அதிலும் குறிப்பாக எல்லாவகையான காய்கறிகளும் இடம்பெறுவது அவசியம். ஏனெனில் அப்போதுதான் உடலுக்கு அனைத்துவிதமான வைட்டமின்களும், மினரல்களும் சரியான அளவில் கிடைக்கும். மற்ற காய்கறிகளைப் போலத்தான் ப்ரக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் முட்டைகோஸ் போன்ற காய்கறிகளும் இடம்பெற வேண்டும். காலிஃப்ளவரை பொரியல், சாலட் என பல்வேறு வழிகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களின் டயட்டில் இது கட்டாயம் இடம்பெற வேண்டும். கார்போஹைட்டை உடலில் சேர்க்காமல் வயிற்றை நிரப்பும் சிறந்த உணவு இது. மேலும் இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துகள் உடலுக்கு அதிக நன்மை பயக்கக்கூடியவை.

பசியை குறைக்கும்

காலிஃப்ளவரில் கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் குறைவு. ஆனால் நார்ச்சத்து நிறைந்தது. இதனால் வயிறு நிறைந்த உணர்வை நீண்ட நேரத்திற்கு கொடுக்கும். இதனால் நீண்ட நேரம் நொறுக்கு தீனி எதுவும் எடுத்துக்கொள்ள தூண்டப்படதாதால் கலோரிகள் கூடாமால் தானாகவே எடைகுறைப்பு நிகழ்கிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

இந்த காய்கறியில் வைட்டமின் சி நிறைவாக இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோயெதிர்ப்பு சக்தியை வலிமையானதாக இருக்கும்போது தொற்றுகள் மற்றும் நோய்கள் தள்ளியே இருக்கும்.

ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள்மீது தாக்கம்

காலிஃபிளவரில் உள்ள வைட்டமின் கே நீங்கள் ஏதேனும் எடுத்துக் கொண்டால், உங்கள் ரத்தத்தை மெலிக்கும் மருந்துகளின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும். வைட்டமின் கே உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது, ரத்தம் உறையும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதுவே உடல் ஆரோக்கியத்திற்கு தீங்காக மாறிவிடும்.

வாயுத்தொல்லையை அதிகரிக்கும்

காலிஃப்ளவர் மற்றும் இதனைச் சேர்ந்த பிற காய்கறிகள் வாயுத்தொல்லையை உருவாக்கும். ஏனெனில் இவற்றிலுள்ள சிக்கலான சர்க்கரைகள் உடைவது தாமதமாகும். இதனால் அவை உடலுக்குள் வாயுவாக உருவெடுக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com