Flip Flop காலணிதான் உங்களுடைய ரெகுலர் தேர்வா? - விளைவுகள் என்னென்னனு தெரிஞ்சுக்கோங்க!

Flip Flop காலணிதான் உங்களுடைய ரெகுலர் தேர்வா? - விளைவுகள் என்னென்னனு தெரிஞ்சுக்கோங்க!
Flip Flop காலணிதான் உங்களுடைய ரெகுலர் தேர்வா? - விளைவுகள் என்னென்னனு தெரிஞ்சுக்கோங்க!

வகை வகையான டிசைன்களில் பல காலணிகள் இருந்தாலும் தெருக்களில் சென்று பார்த்தால் பெரும்பாலானோர் ஃப்ளிப் ஃப்ளாப் வகையான ஃப்ளாட் செப்பல்களையே அணிந்திருப்பார்கள்.

போட்டுக் கொள்வதற்கு எளிதாகவும் வசதியாகவும் இருப்பாதாலும், மழைக் காலத்தில் சீக்கிரத்தில் காய்ந்து விடுவதாலும் இந்த வகை காலணிகளை அனைவருமே விரும்புகிறார்கள்.

ஆனால் ஃப்ளிப் ஃப்ளாப் போன்ற செப்பல்களை அணிவதால் கால்களில் நிறைய பின்விளைவுகள் உண்டாகும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு சென்று வருவது போன்ற சிறு சிறு வேலைகளுக்கு ஃப்ளிப் ஃப்ளாப் செருப்புகளை அணியலாம் என்றும், வெகு தூரம் நடப்பதாக இருந்தால் கட்டாயம் இதை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஃப்ளிப் ஃப்ளாப் அணிவதால் என்ன மாதிரியான பாதிப்புகளெல்லாம் வரும் என்பதை காணலாம்.

1) பாதத்தின் அடிப்பகுதியில் இயங்கும் தசைநார் உள்ளது. இது குதிகால்களை கால் விரகளுடன் இணைக்கிறது. இது plantar fascia என அழைக்கப்படுகிறது. ஃப்ளிப் ஃப்ளாப் வகை செப்பல்களை அணிந்து நீண்ட தூரம் நடக்கும் போது தசைநார்களில் அழுத்தத்தை சேர்ப்பதால் குதிகால்களில் வலியை ஏற்படுத்தக் கூடும்.

2) ஃப்ளிப் ஃப்ளாப்களை அணிந்து நடக்கும்போது கால்களின் முன் புறத்தில் இருக்கும் தசைகள் அதிக அழுத்தத்தை உணரச் செய்வதால் Shin Splints எனும் பிளவை ஏற்படுத்தும்.

3) கால்களில் அதிகளவில் வியர்த்துக் கொட்டினால் ஃப்ளிப் ஃப்ளாப் செருப்பை அணிவதை தவிர்ப்பதே நல்லதாம். ஏனெனில் காலணியில் உள்ள பட்டைகளில் கால்கள் உராயும். அந்த இடங்களில் அதிகளவில் வியர்வை ஏற்பட்டு அப்படியே விட்டால் அது கொப்பளமாக மாறக் கூடும்.

4) இந்த வகை செருப்புகள் கணுக்கால்களில் சுளுக்கு, பிடித்தத்தை ஏற்படுத்தக் கூடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com