நிமிடங்களில் கெமிக்கல் இல்லாத ஹேர் கண்டிஷ்னர் தயாரிக்கலாம்.. எப்படி தெரியுமா?

நிமிடங்களில் கெமிக்கல் இல்லாத ஹேர் கண்டிஷ்னர் தயாரிக்கலாம்.. எப்படி தெரியுமா?
நிமிடங்களில் கெமிக்கல் இல்லாத ஹேர் கண்டிஷ்னர் தயாரிக்கலாம்.. எப்படி தெரியுமா?

கேசத்தை பேணி காப்பதே பெண்களுக்கு மிகப்பெரிய வேலையாக இருக்கும். அதிலும் வரண்ட தலைமுடி உள்ளவர்களின் நிலையை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

சந்தையில் கிடைக்கும் வகை வகையான ஷாம்பூக்கள், கண்டிஷ்னர்கள் என அனைத்தையும் வாங்கி உபயோகித்தாலும் பலன் எதிர்பார்த்த பலன் கிட்டாமல் போவது வழக்கமாக இருந்தாலும், பட்டுப்போன்ற முடியை கொண்டிருக்க வேண்டும் என்பதே தீரா எண்ணமாக இருக்கும்.

இவ்வளவு மெனக்கெடும் உங்களுக்கு எந்தவித செலவும் ஏற்படுத்தாமல் வீட்டில் இருக்கும் அரிசியை கொண்டு தரமான கண்டிஷ்னர் தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

  • 2 அல்லது 3 கைப்பிடி அளவுக்கு அரிசியை எடுத்து நன்றாக கழுவி, அதனை 30 நிமிடங்களுக்கு பாத்திரத்திலோ அல்லது மண்சட்டியிலோ வைத்து ஊர வைக்க வேண்டும்.
  • பின்னர் அதனை அப்படியே அடுப்பில் வைத்து அரிசி மென்மையான சாதமாக வரும் வரை வேக வைக்க வேண்டும். (ஊர வைக்காமல் நேரடியாகவும் வேக வைக்கலாம்).
  • வெந்ததும் அதனை வடிகட்டிவிட்டு, அரிசி கூழுடன் வேகவைத்த ரைஸ் வாட்டரை தேவைக்கேற்ப சேர்த்து கண்டிஷ்னர் பதத்திற்கு மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவேண்டும்.
  • பிறகு சிறிதளவு அதே வேக வைத்த தண்ணீரை சேர்த்து கலந்து அதனை மீண்டும் வடிக்கட்டி ரீஃபிள் பாட்டிலில் ஸ்டோர் செய்துக் கொள்ளலாம்.

அவ்வளவுதான் ஹோம் மேட் கண்டிஷ்னர் தயார்.

வாரம் இரு முறை அல்லது, ஷாம்பூ போட்டு குளித்த பிறகு, ரைஸ் கண்டிஷ்னர் மிக்ஸை 10 நிமிடங்களுக்கு தலையில் ஊர வைத்தால் போதும். வறண்ட கேசம் பளபள கேசமாக மாறும்.

குறிப்பு: ரைஸ் கண்டிஷ்னரை அதிகபட்சம் ஒரு வாரத்திற்கு மேல் ஸ்டோர் செய்ய வேண்டாம். நிமிடங்களில் செய்யக்கூடியதாக இருப்பதால் தேவைப்படும் போது தயாரித்து ஃப்ரஷாகவே பயன்படுத்தலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com