சிறுநீரக கற்கள் எவ்வாறு உண்டாகிறது; நீக்கினால் மீண்டும் வருமா.. தடுக்க என்ன வழி?-மருத்துவர் விளக்கம்

சிறுநீரக கற்கள் எவ்வாறு உண்டாகிறது.அதற்கான காரணம் என்ன? கற்களை நீக்கினால் மீண்டும் உருவாகுமா? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சிறப்பு சிறுநீரக மூத்த மருத்துவர் எஸ்.வி.கந்தசாமி.
சிறுநீரக கல்
சிறுநீரக கல்முகநூல்

சிறுநீரக கற்கள் எவ்வாறு உண்டாகிறது. அதற்கான காரணம் என்ன? கற்களை நீக்கினால் மீண்டும் உருவாகுமா? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சிறப்பு சிறுநீரக மூத்த மருத்துவர் எஸ்.வி.கந்தசாமி. மருத்துவர் தெரிவித்த கருத்துக்களை விரிவாக பார்க்கலாம்..

”தங்களது வாழ்நாளில் 15% மக்கள் ஒரு சில நேரங்களில் இந்த பிரச்சனையை சந்திக்கின்றனர். பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களுக்கு அதிகளவு ஏற்படுகிறது என்ற நிலை இருந்தது. ஆனால் காலப்போக்கில் இந்த நிலை குறுகி கொண்டே வருகிறது. அதன்படி, பெண்களுக்கும் இன்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் அதிகரிப்பு, சிறுநீரக பிரச்னைகளை உருவாக்க காரணமாக அமைகிறது. மேலும் 78 சதவீதம் பேருக்கு தானாகவோ (அ) அறுவை சிகிச்சை இல்லாமலேயே மருத்துவ சிகிச்சையின் மூலமாக சிறுநீரக கற்கள் வெளியேறுகிறது.

சிறுநீரக கல்:

சிறுநீரக கல் என்பது ஒரு கடினமான தாதுப்பொருட்களின் கூட்டு (mineral deposit). இவை சிறுநீரகத்தின் வெளியேயோ அல்லது சிறுநீர் பைக்குள்ளேயோ நிகழ்கிறது. இவை ஆரம்ப காலத்தில் ஒரு சிறிய படிமமாகவோ, அதாவது மைக்ரோ கிரிஸ்டல் வடிவத்தில் தான் தொடங்குகிறது. பிறகு சிறு சிறு படிகங்கள் ஒன்று சேர்ந்து பல படிமங்களாக சில மாதங்களில் அல்லது ஆண்டுகளின் பெரிய கற்களாக உருவெடுக்கிறது.

சிறுநீரக கற்கள் உருவாக்கும் தாதுபொருட்கள்?

பொதுவாக உணவுப்பொருட்கள், தண்ணீர் ஆகியவை கால்சியம், பாஸ்பரஸ், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் மற்றும் சிஸ்டின் போன்ற தாதுப்பொருட்களை உள்ளடக்கியதாக உள்ளது. இவைதான் சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக அமைகிறது.

எவ்வளவு வகைகள் உள்ளது?

கால்சியம் ஆக்ஸலேட், கால்சியம் பாஸ்பேட், ஸ்ட்ருவைட் கல், யூரிக் அமிலம், சிஸ்டின்
கால்சியம் ஆக்ஸலேட், கால்சியம் பாஸ்பேட், ஸ்ட்ருவைட் கல், யூரிக் அமிலம், சிஸ்டின்

கால்சியம் ஆக்ஸலேட், கால்சியம் பாஸ்பேட், ஸ்ட்ருவைட் கல், யூரிக் அமிலம், சிஸ்டின் உள்ளிட்ட வகைகள் உள்ளன.

எப்படி உருவாகுகிறது?

கற்களை உருவாக்குகின்ற மேற்கூறப்பட்ட தாதுப்பொருட்கள் சிறுநீரகத்தில் கரைந்த நிலையில் இருந்து வெளியேறி ஆரம்பத்தில் சிறு படிகங்களாகவும், சிறிய கற்களாகவும் உருவாகிறது. இதன்பிறகு சிறுநீரிலேயே வெளியேறலாம் அல்லது ஒன்றோடு ஒன்று சேர்ந்து பெரிய படிகங்களாக உருமாறலாம்.

சிறுநீரக கல்
உலக தொழுநோய் தினம் | மூட நம்பிக்கைகளை உடைப்போம்... கரம் கோர்ப்போம்!

இந்த தாதுக்கள் சிறுநீரகத்தின் அடிப்படை அலகாக கூறப்படுகின்ற நெப்ரானின் மேல் பகுதியிலேயே தங்கி ஒரு முழு கல்லாக சிறுநீரக திசுக்களிடையே உருவாகிறது. பின்பு நெஃப்ரானின் குழாய் வழியாக சிறுநீரகத்தின் மத்திய பகுதியான பெல்விஸ்ஸை அடைகிறது.

அங்கிருந்து கல்லின் அளவைப் பொறுத்து தானாக வெளியேறி யூரிட்டர் எனப்படும் சிறுநீரக குழாய் வழியாக வந்து பாதையை அடைத்து விடும் (அ) மத்திய பகுதியான பெல்விஸ் பகுதியிலயே தங்கி பெரிய கல்லாகவும் மாறிவிடுகிறது.

கற்கள் உருவாவதற்கான உப்புகள் எங்கிருந்து வருகிறது?

1) சிறு குடல்நோய்- இதில் சிறுநீரகத்தில் இருந்து அதிகமாக கால்சியம் வெளியேறுவது .

2) கல்லீரல் - கல்லீரலில் அதிகப்படியான ஆக்சஸேட் உற்பத்தி

3) பாராதைராய்டு - பாராதைராய்டு நோயினால் அதிகப்படியாக வெளியேறும் கால்சியம் சிறுநீரகத்தில் கலப்பது

4) அதிகபடியான யுரிக் அமில படிவு போன்றவை காரணமாக அமைகிறது.

இதனை தடுக்கும் செயல்முறை என்ன?

மேற்கூறியபடி, கற்கள் ஏற்படாமல் இருக்கதான், சிட்ரேட், பைரோபாஸ்பேட், வெளிமம் போன்ற படிக தடிப்பான்களின் பங்கு என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவை சிறுநீரகத்தில் படிகங்கள் ஒன்றிணைவதை தடுக்கிறது.

ஆனால், இவற்றின் அளவு குறையும் போதோ அல்லது முற்றிலும் இல்லாமல் போகும்போதோதான் சிறுநீரக கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள்:

அசையும் போது முதுகுப்பகுதியில் வழி,

முதுகுப்பகுதியில் தொடங்கி முன் அடிவயிறு வரை வலி பரவும்,

வாந்தி, சிறுநீரில் ரத்தம் வறுதல், சிறுநீர் கழித்தலில் எரிச்சல், சில சமயங்களில் சிறுநீர் வராமலே போகலாம்.

சிறுநீரக கல்
“இப்போதும் பரவுகிறது, இப்போதும் உருமாறுகிறது, இப்போதும் உயிரை கொல்கிறது கொரோனா” - WHO வேதனை!

அறுவை சிகிச்சை இன்றி வெளியேற்ற முடியுமா?

இவை கல்லின் அளவு மற்றும் சிறுநீர் குழாயில் உள்ள இடத்தினை பொறுத்து வேறுபடும்.

கல்லின் அளவு 5 மிமீ க்கும் குறைவானதாக இருந்தால் - தானாக (77%) வெளியேற வாய்ப்பு அதிகம்

கல்லின் அளவு 5 மிமீ க்கும் மேல் இருந்தால் - தானாக வெளியேற (46 %) வாய்ப்பு

மேலும் ஆரம்பக்கட்ட பரிசோதனையில் சிறுநீரக்குழாயின் மேல் பகுதியில் கற்கள் இருந்தால் 22 % கீழ் பகுதியில் இருந்தால், 70% வாய்ப்பு உள்ளது.

எதற்கு அறுவைசிகிச்சை?

  • வலி கடுமையானாலோ, மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியாவிட்டாலோ அறுவை சிகிச்சை அவசியம்.

  • சிறுநீர தொற்று ஏற்பட்டால்,

  • மருத்துவ கிசிச்சை பெற்ற பின்பும் கல் வெளியேறவில்லை என்றால்,

  • சிறுநீரகப்பாதையில் அடைப்பு அதிகரித்து காணப்பட்டால்,

  • ஒரு சிறுநீரகம் இருப்பவர்களுக்கோ அல்லது ஒரே நேரத்தில் இரண்டு சிறுநீர்க் குழாயிலும் கல் அடைப்பு இருந்தாலோ அறுவை சிகிச்சை அவசியம்.

அறுவை சிகிச்சைகள் என்னென்ன?

சிறுநீரக கற்களுக்கு ”இதுதான் சிகிச்சை” என்று ஒரு குறிப்பிட்ட சிகிச்சை முறையை உறுதியாக சொல்ல இயலாது.

எக்ஸ்ட்ராகார்போரியல் ஷாக் வேவ் லித்தோட்ரிப்சி ESWL

யூரேட்டிரோ ரிநோஸ்கோபி (URS)

பெர்குடேனியஸ் நெஃப்ரோ லித்தோடோமி (PCNL)

மீண்டும் வருமா? யாருக்கு சாத்தியம் அதிகம்?

சிறுநீரக கற்களை பொறுத்தவரை ஒரு முறை உருவாகி விட்டது என்றால், மீண்டும் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் கற்களை உண்டாக்க கூடிய பொருட்கள் அதிக அளவில் உடலில் உருவாகி விடும். ஆகவே உரிய மருந்துகளையும் உணவுகளையும் கட்டுப்பட்டுத்துவதன் மூலம் மீண்டும் ஏற்படுவதை குறைக்கலாம்.

உணவு கட்டுப்பாடு?

உணவுகளை பொறுத்தவரை பல தவறான மூடநம்பிக்கை உள்ளது.

இறைச்சியில் உள்ள புரதங்கள் யூரிக் அமிலத்தினை அதிகரிக்கின்ற, சிறிநீரில் சிட்ரேட்டின் அளவை குறைக்கின்றன. இவை இரண்டும் கல் உருவாவதற்கு காரணம். ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் அளவில் இருந்து 4ல் ஒரு பங்காக இறைச்சியை எடுத்துகொள்ளவது நல்லது.

தயிர், ஊறுகாய், சிப்ஸ் போன்றவற்றின் மூலமாக அதிக உப்புகளை எடுத்துக்கொள்வதை தடுக்க வேண்டும்

கீரைகள் மற்றும் புரோக்கோலிகள் காணப்படும் பச்சை நிறப்பகுதிகள் அதிக அளவு ஆக்ஸலேட்டினை கொண்டுள்ளது. இவை கால்சியத்துடன் சேர்ந்து கற்களை உருவாக வாய்ப்புள்ளது.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 லிட்டர் சிறுநீர் கழிப்பதும் அதற்கு ஏற்ப 4 லிட்டர் நீர் அருந்துவது அவசியம்.

மேலும் தக்காளிகள் கற்களை உண்டாக்கும் என்று தவறாக கூறப்படுகிறது. ஆனால் ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால் தக்காளி கற்களை உருவாக்குவது இல்லை என்பது உண்மை என்பதுதான்.

வாழை தண்டு சாறு எடுத்துக்கொள்வதால் கற்கள் கரையும் என்று நம்புகின்றனர். இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com