இன்று அறிமுகமாகிறது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி!

இன்று அறிமுகமாகிறது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி!
இன்று அறிமுகமாகிறது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி!

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் டெல்லியில் கர்பப்ப்பை புற்றுநோய்க்கான தடுப்பூசியை இன்று அறிமுகப்படுத்துகிறார். மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையும் தனியார் நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட்டும் இணைந்து இத்தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளன. உலகளவில் கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் இந்தியாவில் இருக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்தியாவில் கருப்பை புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் 1,23,000 பேர் பாதிக்கப்படுவதாகவும் 67,000 பேர் இறப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. உலகளவில் கருப்பை புற்றுநோய் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இந்தியாவில் அத்தடுப்பூசி முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசியை பெண்கள் தாங்களாக முன்வந்து செலுத்திக்கொள்ள வேண்டும் என தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com