இன்னிக்கு காலைல சாப்பிட மறந்துட்டீங்களா... இந்த பிரச்னைகள் உங்களுக்கு வரலாம்..!

காலை உணவை ஏன் தவிர்க்கக் கூடாது, தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை சொல்கிறார் உணவியல் நிபுணர் லேகா ஸ்ரீதரன்!
காலை உணவு
காலை உணவுTwitter

குறள்:

”மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்“

பொருள்:

முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னர் சாப்பிடுவோமேயானால் உடலுக்கு ‘மருந்து’ என எதுவுமே வேண்டாம்.

குறள்
குறள்Facebook

‘காலையில லேட்டாதான் எழுவேன். அதனால சாப்பாடு ஸ்கிப் பண்ணிடுவேன்’

‘காலையில ரொம்ப வேலை இருக்கும். அதனால சாப்பிட நேரமே இருக்காது’

- இந்த இரண்டு காரணங்களை நாம் அதிகம் கேட்டிருப்போம், அல்லது சொல்லியிருப்போம். உணவே மருந்தென்பார்கள். அப்படிப்பட்ட உணவு, உடலுக்கு சேர வேண்டிய அளவிலிருந்து குறைந்தாலோ / கூடினாலோ பாதிப்புதான். அதிலும் காலை உணவின் நன்மையை அறியாமல் அதைத் தவிர்த்து நமக்கு நாமே பெரிய தீங்கிழைத்து உடலுக்கு கேடு வருவதற்கு வழிவகுத்து கொள்கிறோம்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை...!

மூளைக்குத் தேவையான ஆற்றல் (energy) என்பது குளுக்கோஸ் மூலமாக தான் கிடைக்கிறது. பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு குளுக்கோஸ் தேவை அதிகம்.

குழந்தைகளைப் பொருத்தவரை இரவில் அவர்கள் அதிக நேரம் தூங்க வேண்டும். அதற்கு அவர்கள் இரவு சீக்கிரம் தூங்க வேண்டும். ஆக, இரவு உணவை அவர்கள் விரைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் இரவிலிருந்து காலை வரை எந்த உணவும் உட்கொள்ளாமல் வெகுநேரம் அவர்கள் வயிற்றினை காலியாக வைக்கும் நிலை ஏற்படும். குழந்தைகளை பொருத்தவரை மூளையில் குளுக்கோஸை சேமித்துக்கொள்ளும் திறன் நேரம் என்பதும் குறைவாகவே உள்ளது. இப்படியான பல காரணங்களால் காலையில் அவர்கள் ஆற்றல் மிகக்குறைந்து காணப்படும். உடலுக்கு தேவைப்படும் ஆற்றல் சத்தான உணவின் மூலமே கிடைக்கும் என்பதால், அவர்களுக்கு காலை உணவு மிக முக்கியமானதாக அமைகிறது.

Younger - Elder
Younger - ElderFacebook

ஒருவேளை அவர்கள் காலை உணவைத் தவிர்த்தால், தேவையான ஆற்றல் கிடைக்காமல் போய் மூளையின் செயல் திறன் பாதிக்கப்படும். இதனால் புத்துணர்ச்சியை இழப்பது, கவனச்சிதறல் போன்றவை அவர்களுக்கு ஏற்படும். நன்றாக படிக்கும் குழந்தைகளாக இருந்தாலும் அவர்கள் காலை உணவை தவிர்த்தால் உடல் சோர்வுக்கு உள்ளாக்கி படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் தவிர்ப்பர்.

இதே நிலைதான் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், இளைஞர்கள், முதியவர்களுக்கும். ஒரு நாளை புதிதாக, புத்துணர்ச்சியாக அமைய காலை உணவு என்பது அவசியம்.

இதில் மிக மிக கவனமாக இருக்கவேண்டியவர்கள் கர்ப்பிணிகள். ஏனெனில் சிசு உருவாகும் நேரத்தில் இருந்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு குழந்தையின் ஊட்டசத்துக்கும், நலனுக்கும்கூட இவர்களின் உணவுப்பழக்க வழக்கம்தான் அடிப்படை. கர்ப்பிணிகள் காலை உணவை தவிர்த்தால் தாய்க்கு தேவையான கலோரி கிடைக்காமல் போய், அவரோடு சேர்த்து குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும்.

ஊட்டசத்து - உணவு
ஊட்டசத்து - உணவுTwitter

2 வயதுடைய குழந்தையின் குடல் அளவு மிகவும் சிறியதாகத்தான் இருக்கும் என்பதால், ஒரேநேரத்தில் அதிக அளவு உணவை குழந்தைகளால் உட்கொள்ள முடியாது. ஆகவே அவர்களுக்கு தேவைப்படும் ஒரு நாளைக்கான ஆற்றல் என்பது 3 வேளை உணவை எடுத்து கொள்வதன் மூலமாகவும் 2 முறை ஹெல்த்தி ஸ்நாக்ஸ் எடுத்து கொள்வதன் மூலமாகவும்தான் கிடைக்கிறது. எனவே ஒரு வேளை உணவு தவிர்க்கப்பட்டால் கூட அவர்களுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதில் குறைவு ஏற்படுகின்றது. ஆற்றல் தேவை பூர்த்தியாகவில்லை என்றால் வளர்ச்சி பாதிக்கப்படும்.

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்னைகள்:

  • காலை உணவு தவிர்க்கப்பட்டு மதிய உணவு எடுத்துக்கொள்ளும் நேரங்களில் பசி வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இதனால் அதிகம் சாப்பிடுவோம். இது உடல் பருமனுக்கு காரணமாக அமைகிறது.

  • 10 வயதுடைய குழந்தைக்கு ஒரு நாளைக்கு 1500 கலோரி தேவையென வைத்துக்கொள்வோம். காலை உணவை தவிர்த்து மீதமுள்ள 2 வேளைகளும் குழந்தை சாப்பிட்டாலும், 1000 கலோரிகள் மட்டுமே அந்த குழந்தைக்கு கிடைக்கும். இப்படி ஒரு நாளில் 500 கலோரி வீதம் இழப்பு ஏற்பட்டால் 1 மாதகால முடிவில் அக்குழந்தைக்கு கிடைக்கப்படும் கலோரிகளில் இழப்பு மிக அதிகமாக இருக்கும். இது தொடர்ந்து நடைபெறும் போது வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு உடல்எடை குறைய காரணமாகிறது. அதே சமயம் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறது. இதனால் நோய் பாதிப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

Problems
Problems Twitter
  • ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புள்ளவர்கள் காலை உணவை தவிர்த்தால் திடீர் கோபம், மன அழுத்தம் போன்றவை ஏற்படலாம். காலை உணவில் உணவு மட்டுமல்லாது நீர்சத்தும் கிடைப்பதால், உணவை தவிர்ப்பது டீஹைட்ரேஷனுக்கு காரணமாகலாம். தலைவலி ஏற்படுவது, ரத்த சர்க்கரை அளவு குறைவது, இரைப்பை அழற்சியும் ஏற்படக்கூடும்.

இப்படியாக வளர்ச்சி பாதிப்பது, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவது, உடலின் எதிர்ப்பு சக்தியை பாதித்து உடலில் பல நோய்கள் ஏற்பட காரணவதென காலை உணவை தவிர்ப்பதால் பல பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

இரவு உணவிலும் கவனம் தேவை!

உடலின் வளர்ச்சிதை மாற்றம் காலை, மதியம் போன்ற நேரக்களில் அதிகரித்தும் இரவில் குறைந்தும் காணப்படுகிறது. எனவே இரவில் தாமதமாக உணவை சாப்பிடவும்கூடாது, சாப்பிட்டவுடன் தூங்கவும் கூடாது.

Night Food
Night FoodFacebook

இரவு உணவை சீக்கிரமாக எடுத்துக் கொள்ளவேண்டும். இரவும் உணவை தவிர்க்கக் கூடாது. அதிகளவு எண்ணையில் பொறித்த உணவுகளையும் இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ள கூடாது.

காலையில் என்ன சாப்பிடலாம்?

பால், தானிங்கள் அடங்கிய உணவை எடுத்துக் கொள்லலாம்.

Suggested Food
Suggested FoodFacebook

இட்லி, வேகவைத்த காய்கறிகளை சாப்பிடலாம். இதனால் சரியான சத்துகள் உடலுக்கு கிடைக்கும்.

அடை, சிவப்பு அரிசி சாதம், ஊத்தாப்பம், ரொட்டி உடன் முட்டை சாப்பிடலாம். முட்டையில் உள்ள புரோட்டீன்களும் உடலை புத்துணர்வாக்கி, அந்த நாளை உற்சாகமாக்கும்.

- ஜெனிட்டா ரோஸ்லின் .S

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com