கோடை காலத்தில் தண்ணீர் மட்டுமே அருந்துவது இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்துமா?.. மருத்துவர் சொன்ன தகவல்

கோடை காலத்தில் உடல் நலனை தற்காத்து கொள்ள தண்ணீர் மட்டுமே போதுமானது இல்லை. தண்னீரோடு எலக்ட்ரோலைட்ஸ் மிக முக்கியமான என்று மருத்துவர் சொல்வதென்ன? விவரிக்கிறது இத்தொகுப்பு.
எலெக்ட்ரோ லைட்ஸ்
எலெக்ட்ரோ லைட்ஸ்முகநூல்

கோடை கால வெயிலின் தாக்கமும் அதிகரிக்கும் பாதிப்பும், புல் பூண்டு முதல் மனிதன் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில், இந்த மாதம் மேலும் வெப்பம் அதிகரிக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை மையமானது நிறங்களை அடிப்படையாக வைத்து வெப்பம் அல்லது மழைக்கான எச்சரிக்கை விடுக்கும்.

நிறங்கள் சொல்லும் வெயில் எப்படி இருக்கும்?

பச்சை வண்ணம் என்றால் இயல்பாக இருக்கலாம்.

மஞ்சள் - பாதுகாப்பு நடவடிக்கை அவசியம். முதியவர்கள்,குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.

ஆரஞ்சு - வெயிலின் தாக்கம் மோசமாக இருக்கும். காலை 11- 3 மணி வரை வெளியில் செல்லக்கூடாது.

சிவப்பு - உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கை தேவை . சராசரியாக 100- 1110 டிகிரி வெப்பம் இருக்கும். இவையெல்லாம் நிறங்கள் சொல்லும் வெயிலின் வீரியம்.

இதனை அடிப்படையாக வைத்து, இந்தியா, சீனா, வங்கதேசம், வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இந்தோனேசியாவுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஒருபுறம் வெயிலுக்கான எச்சரிக்கைகள் நாளுக்குநாள் வந்து கொண்டே இருக்க, வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிப்பது எப்படி? என்று ஆலோசிக்க வேண்டியது இன்றியமையாதது.

இந்தவகையில், அதிக வெப்பத்திலிருந்து உடலை தற்காத்து கொள்ள தண்ணீர் மட்டும் போதுமா? வேறு என்ன வேண்டும் என்று விளக்குகிறார் மருத்துவர் ஆதித்யா குகன்.

மருத்துவர் ஆதித்யா குகன்
மருத்துவர் ஆதித்யா குகன்

உடலில் நீர்சத்து இழக்கும் நிலையில் அதோடுகூட உப்பு சத்தும் இழக்க நேரிடும். உடலில் உள்ள சில உப்புச் சத்துக்களான சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்றவை நம் உடலுக்கு தேவை.

இதிலும், சோடியம், பொட்டாசியம் உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று. சோடியம் என்பது நமது நரம்பு, செல்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது. பொட்டாசியம் என்பது உடலின் இதயம் மற்றும் தசைகளின் செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது.

உடலில் ஏற்படும் அதிக வெப்பத்தால் அதிக நீர் சத்து வெளியேறும்போது உப்பு சத்துக்களான சோடியம், பொட்டாசியம் போன்றவையும் வெளியேற கூடும்.

ஆகவே, உடல் வெப்பத்தை தணிக்க தண்ணீர் அருந்துவது மட்டுமே தீர்வாகாது. எலக்ட்ரோலைட்ஸ் அதிக அளவு உள்ள உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டியது அவசியம்.

உதாரணமாக: எலுமிச்சை சாற்றில் சர்க்கரை உப்பு கலந்து குடிப்பது, மோரில் உப்பு கலந்து குடிப்பது போன்றவற்றை செய்யலாம்.

உடலுக்கு தினமும் தேவையான சோடியத்தின் அளவு என்பது 2300 mg. இதுவே வெப்பக்காலங்களில் இந்த அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில், வெறும் தண்ணீரை மட்டும் அறுந்துவது உடலில் ஏற்கெனவே இருக்கும் சோடியத்தின் அளவை நீர்க்க செய்வதற்கு சமம். ஆகவேதான் வெளியில் பயணம் மேற்கொண்டு பிறகு வீடு திரும்புபவர்கள் இது போன்ற எலக்ட்ரோலைட்ஸ் போன்ற உணவுகளைகளையும் எடுத்து கொள்ளலாம்.

எந்தெந்த பொருட்களில் உள்ளது?

  • எல்லா வித சிட்ரஸ் பழங்களிலும் பொட்டசியம் உள்ளது.

  • வாழைப்பழம், நட்ஸ் போன்றவற்றில் பொட்டாசியம் உள்ளது.

  • உப்பு மற்றும் காய்கறிகள், இளநீர், மோரில் உப்பு , எலுமிச்சரி சாறில் உப்பு - சர்க்கரை கலந்து குடித்தால் சோடியம் கிடைக்கும்.

  • ஓஆர்எஸ் போன்றவை எடுத்து கொண்டால் வெப்பதாக்கத்தால் ஏற்படும் நோயிலிருந்து தற்காத்து கொள்ளலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.

  • நீர்ச்சத்து நிறைந்த பழங்கலை எடுத்துக் கொள்ள வேண்டும்.எலெக்ட்ரோலைட் ஐ சமநிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com