\
Human Brain May Have Evolved From Two Separate Neural Systems
BrainReuters

இரண்டு தனித்தனி உறுப்புகளா மனித மூளை? வெளியான ஆய்வு!!

மனித மூளையில், உயர் சிந்தனை, மொழித் திறன், சுவாசம், இதயத் துடிப்பு போன்ற செயல்பாடுகள் இரு தனி அமைப்புகளால் கட்டுப்படுகின்றன என்பது உறுதிப்பட்டுள்ளது.
Published on

மனித மூளை ஒரே உறுப்பாகக் கருதப்பட்டுவந்த நிலைக்கு மாறாக, அது இரு தனித்தனி நரம்பு மண்டலங்களின் இணைப்பாக உருவாகியிருக்கலாம் என்று அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்துப் பார்க்கலாம்.

இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, மூளை முழுவதும் ஒரே வகை முதன்மைச் செல்லில் இருந்து உருவாவதாகவே நம்பப்பட்டது. ஆனால், கரு வளர்ச்சியின்போதே மூளையின் முன்பகுதி மற்றும் பின் பகுதி ஆகிய இரண்டும் முற்றிலும் வெவ்வேறு செல்களில் இருந்து இரு இணையான பாதைகளில் வளர்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Brain
BrainReuters

இதன் மூலம், மனிதனின் உயர் சிந்தனை மற்றும் மொழித் திறனைக் கட்டுப்படுத்தும் முன்பகுதியும், சுவாசம் மற்றும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் பின்பகுதியும் இரு வேறுபட்ட நரம்பு மண்டலங்களாகவே செயல்படுகின்றன என்பது உறுதியாகியுள்ளது. முன்பு, பின்பகுதி செல்களை ஆய்வகங்களில் உருவாக்க முடியாமல் இருந்ததால் தசைநார் சிதைவு நோய் போன்ற மூளைத் தண்டு தொடர்பான தீவிர நோய்களுக்குத் தீர்வு காண்பதில் பெரும் சவால்கள் இருந்தன. தற்போதைய கண்டுபிடிப்பின் மூலம், மூளையின் பின்பகுதி நரம்புகளை ஆய்வகத்தில் தனியாக வளர்த்து, இதுபோன்ற கொடூர நோய்களுக்கான புதிய சிகிச்சைகளைக் கண்டறிய வழிவகை ஏற்பட்டுள்ளது.

Human Brain May Have Evolved From Two Separate Neural Systems
வலி நிவாரணிகளும் ரத்த அழுத்த அதிகரிப்பும்.. அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகளில் கவனம் தேவை!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com