”எப்போ கல்யாணம்?” என்ற கேள்வி உங்களை துரத்துகிறதா? - சமாளிக்க இதோ சில வழிகள்!

”எப்போ கல்யாணம்?” என்ற கேள்வி உங்களை துரத்துகிறதா? - சமாளிக்க இதோ சில வழிகள்!
”எப்போ கல்யாணம்?” என்ற கேள்வி உங்களை துரத்துகிறதா? - சமாளிக்க இதோ சில வழிகள்!

திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்தநாள் என எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் “உன்னுடைய கல்யாணம் எப்போ?”, “நீ எப்போ கல்யாண சாப்பாடு போடப் போற?”, “அடுத்தது உனக்குதான்!” என பலரும் சொல்ல கேட்டிருப்பீர்கள். அதுவும் 90s கிட்ஸ்கள் என்றால் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

இப்படி தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் திருமணம் தொடர்பாக கேள்வி எழுப்பி “இதுக்கு வராமலேயே இருந்திருக்கலாம்” என்று நினைக்க வைக்கும் அளவுக்கு குடச்சல் கொடுப்பார்கள்.

ஏனெனில் ஆணோ, பெண்ணோ குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே கருதப்படுகிறது. குறிப்பாக இந்திய சமூக சூழலில் வாழும் இளைஞர், இளைஞிகளையே இதுப்போன்ற பேச்சுகளும், கேள்விகளும் அதிகளவில் ஆட்கொண்டிருக்கிறது.

இதுப்போன்ற கேள்விகள் உங்களை கவலையடையவும், பதற்றமடையவும், கோபம் கொள்ளவும் செய்கிறதா? சமூக அழுத்தங்களுக்குள் செல்லாமல், அவற்றை எப்படி கையாள்வது என்பது குறித்து காணலாம்.

* திருமண வாழ்க்கையில் இணைவதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ஆம் என்றால் அது உங்களுக்கான விருப்பமா அல்லது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் அழுத்தங்களை சமாளிப்பதற்காகவா என்பதையும் உணர்ந்துக்கொள்ளுங்கள்.

* திருமணம் செய்துக்கொள்ள தயாராக இருந்தாலும் அதனுள் ஈடுபட தயக்கம் இருப்பின், உங்களுக்கான தேவை என்ன என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

* பொறுப்புகளை ஏற்க தயாராக இருக்கிறீர்களா? அவற்றை கண்டறிய இன்னும் நேரம் தேவையா இல்லையா? உங்களுக்கான முன்னுரிமை என்ன என்பதை கண்டறிந்து தீர்வுகாண முற்படுங்கள்.

* மேற்கொண்டு படிக்கவோ, நல்ல பிடித்தமான வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் பிறகு திருமணம் செய்துக்கொள்ளுங்கள். இதனை உங்கள் குடும்பத்தாரிடமும் எடுத்துரையுங்கள்.

ALSO READ: 

* பெற்றோர் அல்லது நண்பர்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்ப்பார்க்கிறீர்கள் என்பதை எடுத்துக் கூறுங்கள். உங்களை எரிச்சலூட்டும், அழுத்தத்தை கொடுக்கும் விஷயம் என்ன என்பதை அவர்களிடம் தெரிவியுங்கள்.

* உங்களுக்கான துணையை தேர்ந்தெடுப்பதற்கு நேரம் தேவைப்பட்டால் அதற்கான வேலைகளை மேற்கொள்ளுங்கள். திருமணம் குறித்த உங்களுடைய எதிர்ப்பார்ப்புகள், கவலைகள் என்ன என்பதை உங்களது பார்ட்னரிடம் கலந்தாலோசியுங்கள்.

* சமூக அழுத்தங்கள் எப்போதும் இருப்பதுதான். அதற்கு செவி மடுத்துக்கொண்டே இருந்தால் மன அழுத்தமே மிஞ்சும். அதற்கு பதிலாக உங்களது மன உறுதியை தேற்றிக்கொள்ளுங்கள். உங்களுடைய முடிவில் தெளிவாகவும் உறுதியாகவும் இருங்கள்.

* இவற்றுக்கெல்லாம் இடையே உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடிய பார்ட்டிகளுக்கு செல்வது, ட்ரிப் போவது, உங்களுக்கு பிடித்தமான படிப்பை தொடர்வது போன்றவற்றை செய்யுங்கள்.

திருமணம் செய்துக் கொள்வதா இல்லையா என்பது முழுக்க முழுக்க உங்களுடைய முடிவாகும். சமூகத்தின் அழுத்தங்களை நினைத்து கவலையுற வேண்டாம்.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com