தீராத ஒற்றைத் தலைவலியா? நிமிடங்களில் விடுபட இதை செய்தால் போதும்!

தீராத ஒற்றைத் தலைவலியா? நிமிடங்களில் விடுபட இதை செய்தால் போதும்!
தீராத ஒற்றைத் தலைவலியா? நிமிடங்களில் விடுபட இதை செய்தால் போதும்!

எந்த வலியை வேண்டுமானாலும் ஒருவரால் பொறுத்துக்கொள்ள முடியும் ஆனால் ஒற்றைத் தலைவலி (migraine) வந்தால் அவ்வளவுதான் அவர்களுக்கு அன்றைய நாள் முழுவதும் எந்த வேலை செய்தாலும் திருப்தியே இருக்காது. ஒருவிதமான இருக்கத்துடனேயே இருப்பார்கள்.

சாதாரணமாக வரக்கூடிய தலைவலியை காட்டிலும் ஒற்றைத் தலைவலி வந்தால் குமட்டலாக இருப்பதும், வாந்தி வருவது போல உணருவது குறிப்பிடத்தகுந்த அறிகுறிகளாக இருக்கும். மேலும் வெளிச்சம், அதிக இரைச்சலில் இருந்து விடுபட்டு இருக்க வேண்டும் என்றே மைக்ரனால் பாதிக்கப்பட்டவர்கள் நினைப்பார்கள்.

இந்த ஒற்றைத் தலைவலி வருவதற்கு என வயது வரம்பெல்லாம் இருக்காது. பரம்பரை நோயாகவும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபட என்ன செய்தாலும் தீர்வே கிடைக்க மாட்டேங்குது என புலம்புவோரும் அதிகமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படியாக மைக்ரைனால் அவதிப்படுவோர் அதிலிருந்து விடுபட எளிய வழிமுறைகளோடு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காணலாம் என கூறியிருக்கிறார் குஜராத்தைச் சேர்ந்த ஆயுர்வேத நிபுணர் திக்ஸா பவ்சர். அதன்படி, உங்கள் வீட்டு கிச்சனில் இருக்கும் மூன்று உணவு பொருட்களை கொண்டே சுலபமாக ஒற்றைத் தலைவலியை போக்கலாம் எனக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவும் வெளியிட்டிருக்கிறார். அவை என்னென்ன என்பதை காணலாம்:

ஊறவைத்த திராட்சை:

10-15 உலர் திராட்சைகளை முந்தைய நாள் இரவே ஊறவைத்து, காலை எழுந்ததும் நல்ல ஹெர்பல் டீ குடித்த பிறகு ஊறவைத்த திராட்சைகளை சாப்பிட வேண்டும். இதை 12 வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் உள்ள பித்தத்தையும் வாதத்தையும் குறைக்கும். மேலும், ஒற்றைத் தலைவலியால் ஏற்படும் எரிச்சல் மனநிலை, அசிடிட்டி, குமட்டல் போன்றவற்றை எளிதாக்கும்.

சீரகம்-ஏலக்காய் டீ:

மதிய உணவு அல்லது இரவு உணவு சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகோ அல்லது மைக்ரைன் வரும்போதெல்லாம் இந்த சீரகம் - ஏலக்காய் டீயை குடிக்கலாம்.

செய்முறை:

அரை டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஏலக்காயை தட்டிப்போட்டு 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து இறக்கி, அதை வடிகட்டி குடிக்கலாம். இந்த சீரகம்-ஏலக்காய் டீ ஒற்றைத் தலைவலியால் ஏற்படும் குமட்டலையும், ஸ்ட்ரெஸ்ஸையும் குறைக்கும்.

பசு நெய்:

அதிகபடியான பித்தத்தை சமநிலைப்படுத்த பசு நெய்யை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். காய்கறிகளை வதக்கும் போது, ரொட்டி அல்லது சாதம் போன்ற உணவுகளை சாப்பிடும் போது பசு நெய்யை சேர்த்து சாப்பிடலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com