’வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி’.. கோடை கால நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

கோடை கால நோய்களில் இருந்து எப்படி குழந்தைகளை பாதுகாக்கலாம் என்று விளக்குகிறார் பொது நல மருத்துவர் டாக்டர். ரேவதி மணிபாலன்
குழந்தை நலம்
குழந்தை நலம்முகநூல்

கோடைக்காலம் குழந்தைகளுக்கான குதூகலத்தின் காலம். அதில் அவர்களின் சந்தோஷத்தை தட்டிப்பறிக்காமல்.. எப்படி பாதுகாப்பாக அவர்களை பராமரிக்கலாம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

வெயிலில் வியர்த்து, விளையாடி வந்தால்தான் ’அப்பாடா விளையாடிய மாதிரி இருக்குது’ என்று கூறும் உங்கள் குழந்தைகளுக்கு சரியான கவனம் அவசியமாகிறது.

ஆகவே, கோடை கால நோய்களில் இருந்து எப்படி குழந்தைகளை பாதுகாக்கலாம் என்று விளக்குகிறார் பொது நல மருத்துவர் டாக்டர். ரேவதி மணிபாலன்.

டாக்டர். ரேவதி மணிபாலன்
டாக்டர். ரேவதி மணிபாலன்

குழந்தைகளை வெப்ப நோயிலிருந்து எப்படி காக்கலாம் ?

  • கோடை காலங்களில் குழந்தைகளுக்கு தாகம் இல்லாவிட்டாலும் கூட, எந்தவொரு செயலுக்கும் முன்னும் பின்னும் எப்போதும் ஏராளமான திரவங்களை(தண்ணீர்) குடிக்கக் கற்றுக் கொடுங்கள்.

(Eg - இளநீர் , நீராகாரம் , மோர் , ஜூஸ் , வெள்ளரி , தர்பூசணி , நுங்கு மாதிரியான குளிர்ச்சி தரும் உணவுகளை அடிக்கடி எடுக்கச் செய்யுங்கள்)

  • வெதுவெதுப்பான காலநிலையில் குழந்தைகள் தளர்வான ஆடைகளை அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஈரத் துணிகளைக் கொண்டு உடல் முழுவதும் வெப்பத்தாக்கம் குறையுமளவு துடைக்கலாம்.

  • வெளியில் இருக்கும்போது நிழலான பகுதிகளைத் தேடவும், அடிக்கடி ஓய்வெடுக்கவும் குழந்தைகளுக்கு நினைவூட்டுங்கள்.

  • வெயில் படாமல் இருக்க சன்ஸ்கிரீன் லோஷன், மற்றும் தொப்பிகளை அணியச் செய்யுங்கள்.

  • பகலின் வெப்பமான நேரங்களில் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள்.

  • குழந்தைகளுக்கு அதிக வெப்பம் ஏற்பட்டால் உடனே வீட்டிற்கு வர கற்றுக்கொடுங்கள்.

  • நிறுத்தப்பட்டுள்ள காரில் குழந்தைகளை தனியாக விடாதீர்கள்.

இந்த சம்மரில் குழந்தைகளுக்கு வேறென்ன தொற்றுகள் வரக்கூடும் ?

ஃபுட் பாய்ஸனிங் மற்றும் வயிற்றுப்போக்கு

நன்கு வேகவைத்த உணவுகளையே உண்ணச் செய்யுங்கள். (Inflammatory food) குடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் அதிக காரம், உப்பு, புளிப்பு மசாலா பொருட்கள் சேர்த்த உணவுகளைத் தராதீர்கள். மீண்டும் மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் மீண்டும் அதையே சூடுபடுத்தி சாப்பிட கொடுக்க வேண்டாம்.

அம்மை தொற்று

சிக்கன் பாக்ஸ் , பொண்ணுக்கு வீங்கி (தாடையில் வீங்கும் அம்மை) , விளையாட்டு அம்மை.

Mumps தாடை அம்மை

எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருடம் Mumps தாடை அம்மை அதிகளவில் பரவி வருகிறது. தடுப்பூசி அட்டவணையில் Mumps vaccine ஐயும் இணைப்பதன் அவசியத்தை அரசுக்கு வலியுறுத்துவோம். அம்மை வந்த குழந்தைகளைத் தனிமைப் படுத்துவதன் மூலம் மற்ற குழந்தைகளுக்கும் பரவாமல் தடுக்கலாம்.

பெருகிவரும்  வாகனங்கள்

ஒற்றை ரூபாய்த் தவணையில் எதுவும் சாத்தியமாகி விட்டதால் , வாகன உபயோகிப்பாளர் எண்ணிக்கை எக்கச்சக்கமாகி விட்டது. பொதுவாகவே அதிக வாகனங்களின் உபயோகம் புவி வெப்பமயமாதலைத் தவிர்க்க இயலாத ஒன்றாக்கி விட்டது. இதில் கோடை வெயிலும் சேர்ந்து கொண்டால் .. கேட்கவா வேண்டும் ?

ஆகவே, குழந்தைகளை இந்த வெயிலிலிருந்து பாதுகாக்கும் அக்கறை நமக்கு இருந்தாலே போதும் தப்பித்து விடலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com