Double Chin
Double Chin Facebook

’Double Chin’ பிரச்னை இருக்க? சர்க்கரை அதிகமா எடுத்தா வயதான தோற்றம் வருமா? மருத்துவர் விளக்கம்!

இரட்டை கன்னம் என்பது கன்னத்தின் அடியில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் ஏற்படுகிறது.
Published on

இரட்டை கன்னம் என்றழைக்கப்படும் Double Chin பிரச்னை உங்களுக்கு இருக்கிறதா?... இதற்கு என்ன செய்ய வேண்டும்? விளக்குகிறார் தோல் நிபுணர் மருத்துவர் வந்தனா மனோகரன்.

தோல் நிபுணர் மருத்துவர் வந்தனா மனோகரன்
தோல் நிபுணர் மருத்துவர் வந்தனா மனோகரன்

1. Double Chin என்றால் என்ன? அதை குறைப்பதற்கான வழி என்ன?

இரட்டை கன்னம் என்பது கன்னத்தின் அடியில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் ஏற்படுகிறது. டயட் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை குறைக்கமுடியும். ஆனால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருக்கும் கொழுப்பை குறைப்பது என்பது எளிதான காரியம் இல்லை.

ஆக.. டயட் மூலமாக அதிகமான உடல் எடையை குறைப்பதால் இரட்டை கன்னம் தொடர்பான பிரச்னையும் தீரும். இது தவிர Straight jaw jut, Neck rolls, Chin lifts போன்ற குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் அந்த பகுதியில் இருக்கும் சதையை குறைக்க முடியாது. ஆனால், ஒழுங்காக்க முடியும்.

Double Chin
தலைக்கு தினமும் எண்ணெய் வெச்சே ஆகணுமா? A - Z மருத்துவர் விளக்கம்!

அதேப்போல ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான நேரத்தில் தூங்குவது, தண்ணீர் பருகி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வது போன்றவை உடல் எடையை குறைக்க உதவும்.

மேலும், அறுவை சிகிச்சை இல்லாத கிசிச்சை முறைகளும் உள்ளது. கொழுப்பு குறைக்க வேண்டிய இடத்தில் ஊசியை செலுத்துவதன்மூலம் குறைக்க முடியும் . CoolSculpting என்று சொல்லக்கூடிய சிகிச்சை முறையில் குறிப்பிட்டப்பகுதியில் இருக்கக்கூடிய செல்களை உறையவைத்து அழிக்க முடியும். ஆனால், இதை ஒரு தோல் நிபுணரோ அல்லது பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் மருத்துவரிடமோதான் செய்ய வேண்டும்.

2 . எடுக்க வேண்டிய உணவு?

உடல் எடையை குறைக்க எடுத்துக்கொள்ளப்படும் உணவையே இதற்கும் எடுத்துக்கொள்ளலாம். புரதசத்து அதிகமாக இருக்கும் உணவுகள், கார்போஹைட்ரே உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்த்து ..காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கும் உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

தினமும் 2 1/2 லிட்டர் தண்ணீரை அருந்தி உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

3. என்ன உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்யும்போது தானாக இரட்டை கன்னத்தில் உள்ள கொழுப்பும் குறையும்.

சைக்கிளிங், ரன்னிங், நீச்சல் போன்ற கலோரிகளை எரிக்கும் உடற்பயிற்சிகளை செய்யவேண்டும். முன்பு சொன்னதுபோல, Straight jaw jut, Neck rolls,Chin lifts போன்ற குறிப்பிட்ட இரட்டை கன்னத்திற்குரிய உடற்பயிற்சியை செய்தால் இன்னும் நன்மை பயக்கும்.

4. சர்க்கரை சாப்பிட்டால் முகம் பருமனடையுமா? இளமையிலேயே முதிர்ந்த தோற்றம் உண்டாகுமா?

100% இது உண்மை. சர்க்கரை சாப்பிடல் உடல் எடை அதிகரிக்கும். முகத்திலும் எடை அதிகரிக்கும். அதிகளவு சர்க்கரை எடுத்துக்கொண்டால் முகம் தடித்தது போன்றும் காணப்படும். நமது உடலில் Glycation என்ற நிகழ்வு நடைபெறும். சர்க்கரை அதிகமாக சாப்பிடும்போது, இது நமது தோலில் இருக்கும் கொலாஜின், எலாஸ்டின் போன்றவற்றோடு இணைந்து விடுகிறது. இதனால், தோலின் வளைவு தன்மை பாதிக்கப்படுவதால் இளைமையிலேயே முதியவர்களின் தோலைப்போல கருவளையும்,தொங்கிய தோல்களும் உண்டாகும்.

Double Chin
சீனாவில் அதிகரிக்கும் HMPV வைரஸ் பரவல்; உலகஅளவில் தாக்கம் இருக்குமா? - விரிவாக விளக்கும் மருத்துவர்!

எந்த அளவு சர்க்கரை எடுத்துக்கொள்வதை கட்டுப்படுத்துக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் முகம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் காணப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com