நீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா?

நீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா?
நீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா?

தினமும் தூங்கி எழுந்தவுடன் முதல்வேலை பல் துலக்குவதுதான். பலர் பெட் காஃபி குடித்துவிட்டுத்தான் பல் துலக்குவார்கள். சிலர் தினமும்தான் துலக்குகிறோமே என்று கடமைக்கு செய்வார்கள். ஆனால் நாம் சாதாரணமாக நினைக்கும் இந்த ஒரு செயலால் உடலில் எத்தனை மாற்றங்கள் ஏற்படும் என்று பலருக்கும் தெரியாது. வாய் சுத்தம், உடல் சுத்தம் என்பதை கருத்தில்கொண்டு முறையாக பல்துலக்க வேண்டும்.

பல் துலக்குவதில் என்ன முறைவேண்டி இருக்கிறது என கேள்வி எழுகிறதல்லவா? சரியான முறையில் துலக்காவிட்டால் காலையில் பிரஷும் கையுமாக எழுந்தும் பயனில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இரவு தூங்கும்போது வாயில் தங்கும் அழுக்குகள் மற்றும் நோய்க் கிருமிகள் வயிற்றுக்குள் செல்லாமல் இருக்க நாம் செய்யவேண்டியவை:

  • விளம்பரங்களில் வருவதுபோல் பிரஷ் நிறைய பேஸ்ட் வைத்துத்தான் துலக்கவேண்டும் என்று அவசியமில்லை. அதிக பேஸ்ட்கூட பற்களுக்கு ஆபத்துதான். முதலில் ஒரு பட்டாணி அளவு பேஸ்ட்டை பிரஷ்ஷில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • பல் ஈறுகளுக்கு நேராக 45 டிகிரி கோணத்தில் பிரஷ்ஷை பிடித்துக்கொண்டு, சர்குலர் மோஷன் வடிவில் பிரஷ்ஷை அனைத்துப் பற்களின்மீதும் படுமாறு தேய்க்கவேண்டும். ஈறுகளை அழுத்தி தேய்க்கக்கூடாது.
  • அதேபோல் பற்களின் உட்புறங்களிலும் தேய்க்கவேண்டும். பிறகு முன்னும் பின்னுமாக மெதுவாக தேய்க்கவேண்டும். மேல்பற்கள் மற்றும் கீழ்பற்கள் என வாய் முழுவதும் மென்மையாக தேய்க்கவேண்டும்.
  • பிறகு சுத்தமான தண்ணீரைக்கொண்டு வாயை கொப்பளிக்கவேண்டும்.
  • நமது வாய் மற்றும் பற்களின் அமைப்புக்கு ஏற்றவாறு பிரஷ்ஷை தேர்ந்தெடுக்கவேண்டும். இல்லாவிட்டால் பல் ஈறுகளில் இடித்து வலி ஏற்படும். கீறல் விழும்.
  • வாய் துர்நாற்றம் வர நாக்கில் அழுக்கு படிவதும் ஓர் முக்கிய காரணம். எனவே டங்க் க்ளீனரை பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.
  • ஒருநாளில் இரண்டுமுறை கூட டங்க் க்ளீனரைப் பயன்படுத்தலாம். ஆனால் அழுத்தக்கூடாது.
  • நீண்ட நாட்கள் நாக்கை சுத்தம் செய்யாமல் விட்டால் வெள்ளையான மாவுபோன்ற படலம் ஒன்று உருவாகிவிடும். இதில் பாக்டீரியாக்கள் சேர்ந்துவிடும். இது வாயில் துர்நாற்றம் மற்றும் பல் பிரச்னைகளை உருவாக்கிவிடும்.
  • சுத்தம் செய்துவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் வாயை கொப்பளிக்கவேண்டும்.

காலை, இரவு என இரண்டு நேரம் பல் துலக்குவது பலவித நோய்க்கிருமிகள் வயிற்றுக்குள் செல்லாமல் பாதுகாக்கும். இதனால் பல வயிற்றுப் பிரச்னைகள் தடுக்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com