குழந்தை பிறந்த உடன் உடல் எடை கூடாமல் இருக்க தாய்மார்கள் இதை உடனை பாலோ பண்ணுங்க - மருத்துவரின் ஆலோசனை

குழந்தை பிறப்பிற்கு பிறகு தாய்மார்கள் எவ்வாறு உடல் எடை கூடாமல் தங்களை பேணலாம் என்று விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் Florience
உடல் எடை கூடாமல் பேணுதல்
உடல் எடை கூடாமல் பேணுதல்முகநூல்

உடல் எடை அதிகரிப்பு என்பது நவீனகாலத்தில் தீராத பிரச்னையாகிவிட்டது. அதிலும், குழந்தை பிறப்பிற்கு பிறகு தாய்மார்களின் உடல் எடை சட்டென அதிகரித்துவிடுவது தீராத ஒன்றாக மாறிவிட்டது.

இந்நிலையில், குழந்தை பிறப்பிற்கு பிறகு தாய்மார்கள் எவ்வாறு உடல் எடை கூடாமல் தங்களை பேணலாம் என்று விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஃப்ளோரன்ஸ் வசந்த பிரபா

மகப்பேறு மருத்துவர் Florence
மகப்பேறு மருத்துவர் Florence

“பிரசவ காலங்களில் குழந்தைகளின் உடல்நிலையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சத்தான மற்றும் புரோட்டீன்கள் அடங்கிய உணவுகளை கர்ப்பிணிகள் எடுத்து கொள்ள பரிந்துரைக்கப்படுவர். இதனால், பிரசவ காலத்தில், சாதரணமாகவே, கர்ப்பிணிகளின் உடல் எடை அதிகரிக்க தொடங்கும். ஒரு சிலர் 10-15 கிலோ வரையிலும், மேலும் சிலர் 20-25 கிலோ வரையிலும் உடல் எடை கூடுவர்.

உடல் நலம் பேணுதல் அவசியம்

  • எப்படி குழந்தை வயிற்றில் இருக்கும்போது உடல்நலன் முக்கியமானதோ, அதேபோல் குழந்தை பிறப்பிக்கு பிறகும் தாய்மார்களுக்கு அதிகளவு உடல்நலம் என்பது முக்கியமானது. ஆகவேதான் ஒரு சில ஆலோசனைகளும் அறிவுரைகளும் தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது.

  • கூடிய உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஜங்க் உணவுகளை உட்கொள்ள கூடாது.

குழந்தைப் பிறப்புக்கு பிறகு எவ்வாறு தாய்மார்களை தங்களை உடல் நலனை பார்த்துக்கொள்ளலாம்?

  • குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதால், சத்தான உணவுகளை உண்பது அவசியம். ஆகவே, உடல் எடை கூடிவிட்டதே என்பதற்காக டயட், ஃபாஸ்டிங் போன்றவை கடைபிடிப்பதை தவிர்க்க வேண்டும். ஃபாஸ்டிங் மூலம் எடையை குறைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஹெல்த்தியான பாஸ்டிங் மூலமாக எடையை குறைக்கலாம். ஆகவே, நிச்சயம் சாப்பிட வேண்டும். அதுவும் ஆரோக்கியமான முறையில் சாப்பிட வேண்டும்.

  • குழந்தைகளுக்கு பாலூட்டுவதால் ஆரோக்கியமான உடல்நிலையை பேண வேண்டும். ஆகவே, அதிகளவு புரோட்டீன்கள் அடங்கிய உணவுப்பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும்.

  • சுண்டல், முளைக்கட்டிய பயிறு, முட்டை, மீன், பன்னீர், பால் ஆகியவற்றை சாப்பிடலாம்.

  • அசைவ உணவு உண்பவர்கள் மீன் போன்ற உணவுகளை அதிகளவு எடுத்து கொள்ளலாம். இது தாய் பால் நன்றாக சுரப்பதற்கும், உடலில் புரோட்டீன்களின் அளவையும் அதிகரிப்பதோடு உடல் எடை கூடாமலும் இருக்க உதவுகிறது.

சத்தான உணவு அவசியம்

  • சத்து மாவு கஞ்சி, வெஜ் சூப் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். மதியம் 11 அளவில் லேசாக உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். உதரணமாக ஜூஸ் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.

  • மதிய நேரத்தில் புரோட்டீன்கள் அதிகளவு இருக்கும் பருப்பு கீரை சேர்த்து வாரத்தில் 3 நாட்கள் சாப்பிடலாம், காய்கறிகள் அதிகளவும் சாதம் கம்மியாகவும் எடுத்துக்கொள்ளலாம்

  • மாலை நேரம் சுண்டல், முளைக்கட்டிய பயிர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். வறுத்த, எண்ணெய்யில் பொறித்த உணவுகளை உட்கொள்ள கூடாது,ஒரே இடத்தில் உட்கார கூடாது

  • முதல் இரண்டு மாதங்களுக்கு எண்ணெய், காரம் போன்ற உணவுகளை அதிகம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்க்கலாம்.

உடற்பயிற்சி அவசியம்

  • தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பிறகு தொப்பை , உடல் எடையை குறைக்க மருத்துவமனையிலேயே உடற்பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படும். ஆகவே மருத்துவ ஆலோசனைகளின் படி உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். இதற்காக குறைந்தது அரைமணி நேரமாவது ஒதுக்க வேண்டும்.

  • பிசியோதெரபி மூலமாக ஆலோசனையும் வழங்கப்படும். அதையும் பின்பற்றவும்.

  • பெரும்பாலானவர்கள் குழந்தைக்கு பால் கொடுப்பதை நிறுத்தும் வரை எந்த உடற்பயிற்சியும் செய்வது இல்லை. இதன்பிறகு உடல் எடை கூறிவிட்டது என்று கூறி மருத்துவரை சந்திக்க வருவார்கள்.

    மேற்கூறியவற்றை எல்லாம் 1 வருடத்திற்குள் செய்ய வேண்டும். அதுவும் குழந்தை பிறந்த 1 அல்லது 2 வாரங்களிலேயே இதனை செய்ய ஆரம்பித்து விடுவது சால சிறந்தது.

  • சுகப்பிரசவத்திற்கு பிறகு 1அல்லது 2 மாதத்திற்கு பிறகு மாடிப்படியில் அடிக்கடி ஏறி இறங்கலாம். குழந்தை பிறப்பிற்கு ஆறு மாதத்திற்கு பிறகு ஸ்கிப்பிங் செய்யலாம். முக்கியமாக நடைப்பயிற்சி மேற்கொள்ளவது நல்லது. இது போன்றவற்றை மேற்கொண்டால் குழந்தை பிறப்பிற்கு பிறகு அதிகரிக்கும் உடல் எடையை கூடாமல் பார்த்துக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com