வெந்நீர்
வெந்நீர்pt web

வெந்நீர் குடிப்பது நன்மை என்பது உண்மையா.? உடல் நலன் குறித்து பரவும் அங்கீகாரம் அற்ற தகவல்கள்!

வெந்நீர் குடிப்பது பல நூறு ஆரோக்கிய பலன்களை தரும் என இணையத்தில் வைரலாக அனுபவப் பதிவுகள் பரவிவருகின்றன. இதில் எவ்வளவு தூரத்துக்கு உண்மை இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Published on
Summary

வெந்நீர் குடிப்பதால் உடல் பருமன் குறையும் என்பதில் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். வெதுவெதுப்பான நீர் செரிமானத்தை தூண்டக்கூடும் என்றாலும், தோல் பளபளப்பாகும் அல்லது மாதவிடாய் வலி குறையும் என்பதில் நிரூபிக்கப்பட்ட உண்மை இல்லை.

உடல் நலன் குறித்து அங்கீகாரம் அற்ற பலர் அனுபவம் என்ற பெயரில் கருத்துகளை வெளியிடுவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதில் ஒன்று ஒரு குவளை வெந்நீர் குடிப்பதால் நூற்றுக்கணக்கான நன்மைகள் இருக்கின்றன என்று கூறுவதாகும். வெந்நீர் குடிப்பதால் உடல் பருமன் குறையும் என்பதில் நிரூபிக்கப்பட்ட உண்மை ஏதும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உணவு உண்பதற்கு முன்பு சர்க்கரை அல்லது அதிக கலோரி கொண்ட பானம் எடுத்துக்கொள்வதை தவிர்ப்பதற்கு, வயிறு நிரம்பிவிட்டது என்ற உணர்வை ஏற்படுத்தி உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பற்கு வேண்டுமானால் நீர்ச் சத்து அதிகம் கொண்ட பானங்களை குடிப்பது நல்லதாக இருக்கலாம்.

வெந்நீர்
வெந்நீர்pt web

வெதுவெதுப்பான குடிநீர் குடிப்பது செரிமானத் தன்மையை தூண்டக்கூடியதாக இருக்கும் என்று சிறிய ஆராய்ச்சி ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே போல வெந்நீர் குடிப்பதால் தொண்டைப் புண் சரியாகும் என்பதும் நிரூபிக்கப்படவில்லை. வெதுவெதுப்பான நீராகாரம் தொண்டைப் புண்ணுக்கு இதமாக இருக்கும் என்பது மட்டுமே உண்மை. அதே போல வெந்நீர் குடிப்பதால் தோல் பளபளக்கும் என்பதும் அறிவியல்பூர்வமாக நிருபிக்கப்படவில்லை. மாதவிடாய்ச் சுழற்சியின்போது வெந்நீர் குடிப்பதால் வயிற்று வலி குறையும் என்பதும் உண்மையல்ல. மாதவிடாயின்போது உடல் நீரேற்றத்துடன் இருப்பது நல்லது என்பது பொதுவான அறிவுறுத்தல் மட்டுமே.

வெந்நீர்
மச்சத்தை சுயமாக அகற்றுவதால் ஆபத்து.. மருத்துவர்கள் எச்சரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com