ஹெச்எம்பிவி வைரஸ்
ஹெச்எம்பிவி வைரஸ்முகநூல்

தமிழகத்தில் இருவருக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு!

தமிழகத்தில் ஹெச் எம் பி வி வைரஸால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் ஹெச் எம் பி வி வைரஸால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் சேலத்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சிகிச்சையில் உள்ளதாகவும் உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை வைரஸ் தொற்று புதியது அல்ல என்றும் 2001ஆம் ஆண்டிலிருந்தே இதன் பாதிப்பு இருந்து வருவதாகவும் அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹெச்எம்பிவி வைரஸ்
இந்தியாவில் 3 பேருக்கு HMPV வைரஸ் தொற்று.. கர்நாடகாவில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

உரிய சிகிச்சை மூலம் நோயை சரி செய்யலாம் என்றும் இது குறித்து அச்சம் தேவையில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளில் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இத்தொற்று பரவலை தடுக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தொற்று பரவல் குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தேவைப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com