இதனால் தான் LOVER-க்கு சாக்லேட் கொடுக்குறாங்களா?! - கொஞ்சம் சாக்லேட்! கொஞ்சம் வரலாறு!

இதனால் தான் LOVER-க்கு சாக்லேட் கொடுக்குறாங்களா?! - கொஞ்சம் சாக்லேட்! கொஞ்சம் வரலாறு!
இதனால் தான் LOVER-க்கு சாக்லேட் கொடுக்குறாங்களா?! - கொஞ்சம் சாக்லேட்! கொஞ்சம் வரலாறு!

நீங்க சாக்லேட் ப்ரியரா இருந்தால் , சாக்லேட் தயாரிப்பதற்கான முக்கியமான மூலப்பொருட்களைக் கண்டுபிடித்துக் கொடுத்த ஒரு நபருக்கு நன்றி சொல்லவேண்டும். அந்த நபர் யார்ன்னா.. அவர், மரம் விட்டு மரம் தாவுவாறு, பல சேட்டைகள் செய்வார்.. நம்ம முன்னோரென்று கூட அவரை சொல்லுவோம்ஆம். அந்த அவர், குரங்கு தான்!

குரங்கு.. சாக்லேட்டை கண்டுபிடித்த வரலாறு!

ஒரு நாள் அமேசான் காட்டு பகுதிகளில், வழக்கத்தை விட குரங்கள் உற்சாகம் திரிவதை ஆதிமனிதன் கவனிச்சியிருக்கான். பின் வந்த நாட்களிலும் இது தொடரவேஒரு நாள் குரங்குகளை வேவு பார்த்தால் என்ன விசயமென்று தெரிந்துவிடும் என முடிவு செய்து, குரங்குகளை பின் தொடர்ந்தபோது, ஒரு மரத்தில் காய்ச்சு தொங்கின பழத்தை பறித்து, அந்த பழத்தைப் பிழிந்து, அதனுள் இருக்கும் சதைப் பகுதியை எடுத்து தின்றுகொண்டு இருந்தன.

குரங்குகளின் உற்சாகத்துக்கு இந்த பழம் தான் காரணமோ என்ற சந்தேகத்திலும் தயக்கத்திலும் , ஆதிமனிதமும் அந்த பழத்தின் சதைப் பகுதியைச் சாப்பிட்டுப் பார்க்கிறான், பழங்கள் இனிப்பாக இருந்துள்ளன. சுவை பிடித்துப்போகிறது. அது தான் கோக்கோ மர பழங்கள். அந்த பழத்தின் விதைகள் சேலான கசப்பு சுவையில் இருந்ததால், கீழே போட்டுவிட்டான். அப்போது தான் கவனித்தான், தரையிலும் பல விதைகள் கிடந்துள்ளன. ஆம் குரங்குகளுக்கும் அந்த விதை பிடிக்கவில்லை என்று தெரிந்துகொண்டான்உடனே இந்த சதைப் பகுதியைத் தான் சாக்லேட்டாக உருவானது என நினைத்தீர்கள் தானே?

அதுதான் இல்லை..

குரங்குகளும் , ஆதிமனிதனுக்குப் பிடிக்காத அந்த கோக்கோ விதையை தான் இன்று, நாம் சாக்லேட் தயாரிக்கப் பயன்படுத்துகிறோம்.

மாயர்களின் உற்சாக பானம்

கி.மு 600-ல், மெக்சிகோவில் வாழ்ந்த Olmec Heartland என்ற ஆதிபழங்குடி தான் கோக்கோ செடிகளை வளர்த்த முதல் மனிதர்கள். அந்த பழங்குடி மக்கள் இதை Kakawa என்ற பெயரில் அழைத்துள்ளனர். இந்த Kakawa என்பதிலிருந்து தான் CACAO என்ற வார்த்தை வந்துள்ளது.

கி.பி 300- 900 வரை இருந்த மாயன்கள் நாகரிகத்தில் கோக்கோ பீன்ஸ், புனிதமான கலாச்சாரம் மிக்க உணவுப் பொருளான மாறியிருந்தது. மாயர்களின் கடவுளுக்கு, இந்த கோக்கோ பீன்ஸை படைத்துத் தான் வழிபட்டு உள்ளனர். Popol vuh என்ற மாயன்களோட புனித நூலில், உலகின் ஆதி மரமாக, புனித சின்னமாகக் கோக்கோ மரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரி.. மாயர்கள், இந்த கோக்கோ பீன்ஸை எப்படி சாப்பிட்டார்கள் தெரியுமா?

அவர்களுக்கு இந்த கோக்கோ தான் உற்சாக பானமே. சோளம், மிளகாய், தேன், நிலக்கடலை உள்ளிட்டவையுடன்  கோக்கோ விதைகளையும் அரைத்துச் சேர்த்துக் கொதிக்க வைத்து, இனிப்பு, கசப்பு என பல சுவைகளில் அருந்தியுள்ளனர்.

மாயர்களுக்குப் பிறகு கோக்கோவைப் புனித பொருளாகக் கொண்டாடினவர்கள், மெக்சிகோவில் பெரிய ராஜ்ஜியத்தை உருவாகி ஆண்ட அஸ்டக் இனத்தவர்கள். இவர்கள் காலத்தில் கோக்கோ, அரச குடும்பத்துக்கும் வசதிபடைத்தவர்களுக்குமானதாக மாறினது. கோக்கோ பீன்ஸை பண்டம் மாற்றும் முறையில் பணமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கோக்கோ மரங்கள் எங்கு வளரும்?

பூமத்திய ரேகையிலிருந்து 20டிகிரி வடக்கு தெற்கு பகுதிகளில், அதிகமாக மழைபொழிவு இருக்கக்கூடிய வெப்பமண்டல காடுகளில் மட்டும் தான் இந்த கோக்கோ மரங்கள் அதிகமாக வளரும். ஒரு கோக்கோ மரத்தின் உயரம் 8 மீட்டர் வரை வளரும்.

கோக்கோ காய் பழுத்த பிறகு, அந்த பழத்தை உடைத்து உள்ளிருக்கும் விதையைத் தனியாக எடுத்து ஒரு வாரத்துக்கு மேல் நொதிக்க வைப்பார்கள். பின் நொதித்த விதைகளை காயவைத்தெடுத்து, வறுப்பார்கள்.

இப்படி வறுத்த கோக்கோ பீன்ஸை தரம் பிரிப்பார்கள். இதில் கோக்கோ பட்டர், கோக்கோ ஆயில், கோக்கோ பவுடர் தயாரிக்கிறார்கள். இந்த கோக்கோ பட்டர் மற்றும் கோக்கோ பவுடருடன் சக்கரை போன்ற வேறு சில பொருட்களைச் சேர்த்து தான் சாக்லேட்டாக நமக்குக் கிடைக்கிறது.

காதலிக்கும் போது ஏன் சாக்லேட் கொடுக்கிறார்கள்?

வரலாற்று நெடுக்க சாக்லேட் குறித்த சுவாரசியமான பல கதைகள் இருக்கிறது. அதில் ஒன்று, கஸனோவா!

18ம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த கஸனோவா.  பல பெண்களை மயக்கிய ரோமியோ. ‘ The Story of my life ‘’ என்ற சுயசரிதையில் ஏகப்பட்ட காதல் கதை இருக்கிறது. அதில் நமக்குத் தெரியவரும் ஒரு விசயம், அவர் பெண்களை மயக்குவதற்கு சாக்லேட்டைத் தான் பயன்படுத்தியிருக்கிறார். அதன் நீட்சிதானோ என்னவோ, இன்றளவும் ஆண்கள் தாங்கள், காதலிக்கும் பெண்களுக்கு சாக்லேட் கொடுப்பது.

சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தீமைகள் –

75% மேல் கோக்கோ இருக்கும் டார்க் சாக்லேட் தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராது. தினமும் 10கிராம் அளவில் டார்க் சாக்லேட் சாப்பிடும் போது பலவித நன்மைகள் கிடைக்கும். ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதால், உடலில் ரத்த சுழற்சியை அதிகரிக்கும். இதனால் உயர் இரத்த அழுத்தமும், மன அழுத்தமும் ஏற்படாமல் கூல்லாக இருக்கலாம். கூட இளமையாகவும் இருக்கலாம்.

கோக்கோவில் இருக்கும் polynomial-க்கு நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்கும் சக்தியும் இருக்கிறது.

ஆனால் இரவு நேரத்தில் சாக்லேட் சாப்பிட்டால் தூக்கம் தடைப்படும். சாக்லேட் சாப்பிட்ட பிறகுச் சரியாக பற்களைச் சுத்தம் செய்யாவிட்டால் பற்சொத்தையையும் விரைவில் வரும்.

இளமையான தோற்றத்தைத் தரக்கூடிய சாக்லேட்டை போதுமான அளவில் சாப்பிட்டு நீங்களுக்கும் இளமையாக இருங்கள்! 

இந்த செய்தியை வீடியோ வடிவில் காண..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com