தாய் சேய் நலம் - கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள்..!

தாய் சேய் நலம் - கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள்..!
தாய் சேய் நலம் - கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள்..!

சாதாரண நாட்களைவிட கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பது அவசியம். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகால நீரிழிவு, தைராய்டு, அதீத மன அழுத்தம், இரும்புச் சத்துக் குறைபாடு, அனீமியா, எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். சரிவிகித உணவுமுறை அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும். அவர்களுக்கு சமையலறையிலேயே அளவுக்கதிகமான ஊட்டச்சத்துகள் கொட்டிக்கிடப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பயிறுகள், தானியங்கள், பழங்கள், காய்கறிகள் என அனைத்தையும் முறையாக எடுத்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை சரியான அளவில் கிடைக்கும்.

கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்யமான வளர்ச்சிக்கு கால்சியம், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் புரதம் ஆகியவை மிகமிக அவசியம்.

தானியங்கள், பயிறு வகைகள், பருப்புகள், சிட்ரஸ் பழங்கள், பச்சை இலைகள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. எனவே இவை அனைத்தும் தினசரி உணவில் இருக்கவேண்டும்.

பால், தயிர், சீஸ், மீன் போன்றவை கருவின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றை வழங்கும்.

சாதாரண நாட்களைவிட கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு இரண்டு மடங்கு இரும்புச் சத்துத் தேவைப்படுகிறது. இரும்புச்சத்து குறையுபோது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கணிசமாகக் குறைந்துவிடும். எனவே பச்சை இலைகள், காய்கறிகள் மட்டும் சிட்ரஸ் பழங்களை கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

தானியங்கள், பால் மற்றும் பயிறு வகைகளில் புரதச்சத்து நிறைந்துள்ளது. எனவே இவை அனைத்தும் கர்ப்பிணிப் பெண்களின் தினசரி உணவில் இடம்பெற்றிருக்கவேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் செயல்திறன் பாதிக்கப்படும் மற்றும் அவர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிரமம் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com