சுயிங்கம் மெல்வது பிடிக்குமா? இந்த ஹெல்த் டிப்ஸ் உங்களுக்குத்தான்; டாக்டர்களின் வார்னிங்!

சுயிங்கம் மெல்வது பிடிக்குமா? இந்த ஹெல்த் டிப்ஸ் உங்களுக்குத்தான்; டாக்டர்களின் வார்னிங்!
சுயிங்கம் மெல்வது பிடிக்குமா? இந்த ஹெல்த் டிப்ஸ் உங்களுக்குத்தான்; டாக்டர்களின் வார்னிங்!

சுயிங்கம் மெல்வது யாருக்குதான் பிடிக்காமல் இருக்கும்? சுயிங்கம் மெல்லும் போது இனிப்பாக மட்டுமே இருப்பதாக நினைத்திருப்பீர்கள் ஆனால் சுயிங்கம் மெல்வதால் முறையாக சுவாசிக்கவும் செய்வதோடு, புகைப்பிடிக்கும் எண்ணத்தில் இருந்து வெளியேறவும் உதவுகிறது என்றும், நியாபக சக்தியை மேம்படுத்தும் எனவும் மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இதுபோக உடல் எடையை குறைக்க எண்ணுவோர் ஜவ்வு போன்று இருக்கும் சுயிங்கம் மெல்வதால் நல்ல பலன் கிடைக்கும் என்றும், ஆனால் அளவுக்கு மீறி சுயிங்கம் மெல்லக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி இருக்கையில், சுயிங்கம் எடுத்துக்கொள்வதால் விளையும் நன்மைகள் என்ன என்பதை காணலாம்:

1) பசியை குறைக்கும்:

சுயிங்கம் மெல்வது பசியை குறைக்க உதவும். வயிறார சாப்பிட்டது போன்ற உணர்வை கொடுக்கும். மேலும், ஜங்க் உணவோ அல்லது கூடுதலாக உணவு உண்பது சுயிங்கம் மெல்வதால் தடுக்கப்படும்.

2) இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும்:

வாக்கிங் செல்லும் போது சுயிங்கம் மெல்வதால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். கலோரிகளை எரிக்கவும் உதவுவதாக நம்பப்படுகிறது. Journal of Physical Therapy Science வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், நடைபயிற்சியின் போது சுயிங்கம் மென்று திண்பதால் வேகமாக நடக்க மக்களை ஊக்குவிக்கும் என்று கூறுகிறது. வயதானவர்களின் எடை அதிகரிப்பைத் தவிர்க்கவும் உதவுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

3) உட்கொள்ளும் முறையில் மாற்றம்:

உங்களது திட்டமிட்ட உணவைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப சுயிங்கம் உதவுகிறது. அதிகமாக உண்ணும் தின்பண்டங்கள் மற்றும் கலோரிகள் நிறைந்த உணவுகளை உண்ணும் ஆசையைக் குறைக்கவும் இது உதவுகிறது. சுயிங்கம் மெல்வதால் உந்துதலாக சாப்பிடுவதைக் குறைப்பதாக Frontiers in Psychology என்ற மருத்துவ இதழ் கூறுகிறது.

4) கலோரிகளை எரிக்கிறது:

National Library of Medicine-ல் வெளியிடப்பட்ட ஆய்வில், சுயிங்கம் அதிக கலோரிகளை எரிக்க உதவும். காலை உணவுக்கு முன்னும் பின்னும் பசை போன்ற சுயிங்கமை மெல்வோர் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும்போது, உணவுக்கு அடுத்த மூன்று மணி நேரத்தில் 3-5 சதவீதம் அதிக கலோரிகளை எரிப்பதாக ஆய்வு மூலம் தெரிய வந்திருக்கிறது. இதேப்போன்ற மற்றொரு ஆய்வில், உணவுக்குப் பிறகு சுயிங்கம் மெல்வதால் diet-induced thermogenesis (DIT) அதிகரிக்கச் செய்கிறது. இதனால் செரிமானத்தின் மூலம் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கையாக கருதப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com