\
Harvard Explains Why You Forget Things So Easily
BRAIN FOGx

ஹாங் ஆகும் மூளை.. உங்களுக்கும் பிரைன் ஃபாக் வந்திருக்கா.? ஹார்வர்டு அறிக்கை சொல்வது என்ன?

ஃபோன் ஹாங் ஆனா ரீஸ்டார்ட் பண்றோம்... அதே போல மூளை சோர்வானால் தேவைப்படுவது, இன்னும் ஒரு காஃபி இல்ல.. ஓய்வுதான் முக்கியம்
Published on

ஓரு ரூமுக்குள்ள போறீங்க அப்போ எதுக்காக வந்தோம்னு மறந்துடுறீங்களா? இல்ல ஃபோன் கையில வச்சுட்டே எங்கே வச்சோம்னு யோசிங்கிறீங்களா? இது குறித்து ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியின் சுகாதார ஆய்வறிக்கையில சுவாரசியமான தகவல் வெளியாகியிருக்கு. நம்ம ஸ்மார்ட்ஃபோன்ல ஒரே நேரத்தில நிறைய ஆப்ஸ் ஓடினா ஃபோன் ஸ்லோ ஆயிடும். ஹாங் ஆகும்... அதே மாதிரி நம் மூளைக்கும் நடப்பதாகவும், இதைத்தான் பிரைன் ஃபாக் என்று அழைப்பதாகவும் அந்த அறிக்கையில சொல்லப்பட்டிருக்கு...

Mobile use
Mobile useX

பிரைன் ஃபாக் வரும்போது , பெயர்கள் ஞாபகம் வராது, கவனம் செலுத்த முடியாது, சின்ன வேலையை முடிக்க அதிக நேரம் எடுக்கும், இதே போல யாரவது பேசினா, “ ஒரு நிமிஷம் மறுபடியும் சொல்லுங்கன்னு”” கேட்கத் தோணும்.. இந்த அறிகுறி இருந்தா, மூளை வேலை செய்யலுனு அர்த்தம் இல்ல.. ஒரு நாள்ல, நம் மூளை ஆயிரக்கணக்கான தகவல்களை பிராசஸ் செய்யுது.. நோட்டிஃபிகேஷன்ஸ், இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் சார்ட்ஸ், ஒர்க் ஸ்ட்ரஸ்னு, நம் மூளைக்கு ஓய்வே இல்லாம போகலாம்.. அதனாலதான் சில நேரத்துல நம் மூளை கொஞ்சம் பிரேக் கொடுங்கன்னு சொல்லும். இதைத்தான் பிரை ஃபாக் போல உணரப்படலாம்னு சுகாதார ஆய்வறிக்கையில சொல்லப்பட்டிருக்கு.

ஃபோன் ஹாங் ஆனா ரீஸ்டார்ட் பண்றோம்... அதே போல மூளை சோர்வானால் தேவைப்படுவது, இன்னும் ஒரு காஃபி இல்ல.. ஓய்வுதான் முக்கியம்..... உங்க மூளை ரேம் ஃபுல் ஆச்சுன்னா கொஞ்சம் ஓய்வெடுங்க.... பிரைன் ஃபாக்கை குறைக்க 7 முதல் 8 மணி நேரம் தூக்கம், போதுமான தண்ணீர், 30நிமிடம் உடற்பயிற்சி, தேவைன்னு சொல்றாங்க... ஸ்கிரீன் டைம் இடைவெளில உங்க ஹெல்த்துக்காகவும் நேரம் ஒதுங்குக்க...

Harvard Explains Why You Forget Things So Easily
2100க்குள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்.. சென்னைக்கு இரட்டை ஆபத்து - ஆய்வு எச்சரிக்கை
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com