கோப்பு படம்
கோப்பு படம்Pt web

தமிழ்நாடு | இன்ப்ளூயன்ஸா மற்றும் அடினோ வைரஸ் பாதிப்பு அதிகம்.. சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

தொடர் சளி, இருமல் காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால், ஏழு வகையான பரிசோதனை செய்ய பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
Published on
Summary

இன்ப்ளூயன்ஸா மற்றும் மற்ற வைரஸ் தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், சமூகத்தில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் அதிகளவில், இன்ப்ளூயன்ஸா வைரஸ், ஆர்.எஸ்.வி எனப்படும் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் அடினோ வைரஸ் தொற்றுகளால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக பரவி வருகின்றன. தற்போது, கொரோனா பலவீனப்பட்ட பருவ கால நோயாக இருந்தாலும், அதில் உருமாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதற்கான பரிசோதனை, அவ்வப்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.

நிமோனியா காய்ச்சல்
நிமோனியா காய்ச்சல்Pt web

இந்நிலையில் கொரோனா, பறவைக் காய்ச்சல், டெங்கு, டைப்பாய்டு, மலேரியா உள்ளிட்ட ஏழு வகையான பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய் பாதிப்புகள் சமூகத்தில் இல்லை என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோப்பு படம்
அதீத வெப்பம் | ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் நிகழும் அபாயம்.. லான்செட் ஆய்வு எச்சரிக்கை!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com