அத்தியாவசிய பட்டியலிலிருந்து 26 மருந்துகள் முழுமையாக நீக்கம்! எவையெல்லாம் தெரியுமா?

அத்தியாவசிய பட்டியலிலிருந்து 26 மருந்துகள் முழுமையாக நீக்கம்! எவையெல்லாம் தெரியுமா?
அத்தியாவசிய பட்டியலிலிருந்து 26 மருந்துகள் முழுமையாக நீக்கம்! எவையெல்லாம் தெரியுமா?

மக்களுக்கு அனைத்து மட்டங்களிலும் கட்டுப்படியான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த அத்தியாவசிய மருந்துகள் பட்டியலிலிருந்து சுமார் 26 மருந்துகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதேநேரம், கூடுதலாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலை வெளியிட்ட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, அதன்பின்னர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் `அனைவருக்கும் மலிவான விலையில் மருந்து' என்ற திட்டம், மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது” என கூறியுள்ளார்.

மேலும் பேசுகையில், “வெளியிட்டிருக்கும் புதிய பட்டியலில் கூடுதலாக 34 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் அப்பட்டியலில் இப்போது 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளன. முந்தைய பட்டியலில் இருந்து 26 மருந்துகள் நீக்கப்பட்டும் உள்ளன. இப்போதுள்ள 384 மருந்துகளில், 27 மருந்துகள் சிகிச்சைப் பிரிவுகளுக்கென வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மருந்துகள் யாவும் செயல்திறன், முன்னுரிமை, தரம், விலை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அம்சங்களின் அடிப்படையில் மருந்துகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே தேசிய பட்டியலின் நோக்கமாகும்” என்றார்.

இதுபோன்ற அத்தியாவசிய பட்டியல் 1996ம் ஆண்டு முதல் முதலாக வகுக்கப்பட்டது. அதன் பின்னர் 2003, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் இதற்கு முன்பு 3 முறை திருத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவிண் பவார், மத்திய சுகாதாரத்துறை செயலர் திரு ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட அந்த 26 மருந்துகளின் பெயர்கள் பின்வருமாறு:

1. Alteplase | 2. Atenolol | 3. Bleaching Powder | 

4. Capreomycin | 5. Cetrimide | 6. Chlorpheniramine |

7. Diloxanide furoate 8. Dimercaprol | 9. Erythromycin |

10. Ethinylestradiol | 11. Ethinylestradiol(A) + Norethisterone (B) |  12. Ganciclovir |

13. Kanamycin | 14. Lamivudine (A) + Nevirapine (B) + Stavudine (C) 15. Leflunomide 

16. Methyldopa 17. Nicotinamide 18. Pegylated interferon alfa 2a, Pegylated interferon alfa 2b |

19. Pentamidine 20. Prilocaine (A) + Lignocaine (B) 21. Procarbazine |

22. Ranitidine 23. Rifabutin 24. Stavudine (A) + Lamivudine (B) 

25. Sucralfate | 26. White Petrolatum

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com