\
Good News for People with Diabetes and Desk Workers
model imageweb

உட்கார்ந்தே பணியாற்றுபவரா நீங்கள்? உங்களுக்கு ஓர் நற்செய்தி!

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் , நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்றுபவர்களும் சோலியஸ் புஷ்-அப் (Soleus Push-up) எனும் பாதப்பயிற்சி செய்யலாம்.
Published on

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நீண்டநேரம் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கும் ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' இதழில் வெளியான கட்டுரை குறிப்பிடும் தகவல்களைப் பார்க்கலாம்.

நம் காலின் பின்பகுதியில் உள்ள சோலியஸ் (Soleus) என்ற தசையைச் செயல்படுத்துவதன் மூலம், ரத்தத்தில்உள்ள சர்க்கரை அளவை வியக்கத்தக்க வகையில் குறைக்க முடியும் எனப் புதிய ஆய்வு கூறுகிறது. சோலியஸ் புஷ்-அப் (Soleus Push-up) எனப்படும் இந்தப் பயிற்சியை எப்படிச் செய்வது?

Good News for People with Diabetes and Desk Workers
soleus push up web

நாற்காலியில் அமர்ந்தபடி, பாதத்தின் முன் பகுதியைத் தரையில் ஊன்றி, குதிகாலை மட்டும் மேலே தூக்கி, பின் கீழே இறக்க வேண்டும். சாதாரண நடைப்பயிற்சியைவிட, இது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை விரைவாக எரிக்க உதவுகிறது. உணவருந்திய பின் இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம், சர்க்கரை அளவு 52 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உடற்பயிற்சி நிலையத்துக்குc செல்ல முடியாதவர்களுக்கும் அல்லது கடினமான உடற்பயிற்சி செய்யமுடியாத முதியவர்களுக்கும், அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் இது ஒரு மிகச்சிறந்த தீர்வாகும். உட்கார்ந்த இடத்திலேயே ஆரோக்கியத்தைப் பேண உதவும் இந்த எளிய முறையை எல்லோரும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை கூறுகிறது.

Good News for People with Diabetes and Desk Workers
மூட்டு வலி, நீரிழிவு நோய் போன்ற அபாயங்களை தவிர்க்க.. உடலுக்கு வலுவூட்டும் முக்கியமான 3 பயிற்சிகள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com