GBS நோய் யாருக்கு ஏற்படலாம்? மருத்துவர் தேரணிராஜன் விளக்கம்!
GULLEIN BAREE SYNDROME நோயால் 15 முதல் 35 வயதுள்ள நபர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் தேரணிராஜன் தெரிவித்துள்ளார். GBS நோய் குறித்து அவர் நம்மிடையே கூறியவை:
“சென்னைக்கு GBS நோய் என்பது புதிதல்ல... வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சளி ஆகியவை GBS-ன் முக்கிய அறிகுறிகள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் வைரஸ்களால் இந்த நோய் ஏற்படுகிறது.
HMPV, கொரோனா, இன்ஃபுளூயன்சாவால் பாதிக்கப்பட்டவர்களை இந்நோய் தாக்கி தசை பலவீனம், உணர்வின்மை, பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும். முதலில் கால்களில் பாதிப்பு தொடங்கி மெதுமெதுவாக மற்ற பாகங்களுக்கும் பரவும். கால்கள் மரத்துப்போவதால் எழுந்து நடப்பதே சிரமமாக இருக்கும். தமிழகத்தில் நாள்தோறும் GBSஆல் அநேகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
தொடக்கத்திலேயே இந்நோயைக் கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்தலாம். எப்போதுமே வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. மக்கள் இந்நோய் குறித்து அச்சப்பட தேவையில்லை, கவனமாக இருப்பதே போதுமானது” என்றார்.